இன­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டு­க ளில் ஈடு­ப­டு­வோரை பார­பட்­ச­மின்றி கைது செய்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­ பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். நாட்டில் இன­வா­தத்தை விதை த்து அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்தும் மறை­முக நிகழ்ச்சி நிரல் ஒன்று  அமுல்படுத்­தப்­பட்டு வரு­வ­தாக புல­னாய் வுப் பிரி­வுக்கு தகவல் கிடைத்­துள்ள நிலை யில், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ர­வுக்கு ஜனா­தி­பதி இந்த உத்­த­ரவை நேற்று நேர­டி­யாக பிறப்­பித்­துள்ளார்.

நேற்­றைய தினம் பாது­காப்பு சபைக் கூட்­டத்தை தொடர்ந்து இடம்­பெற்ற விசேட கூட்டம் ஒன்­றி­னை­ய­டுத்தே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொலிஸ் மா அதி பர் பூஜித ஜய­சுந்­த­ர­வுக்கு

நேர­டி­யாக இந்த உத்­த­ர­வினை பிறப்­பித்­துள்ளார். அத்­துடன் இன­வா­ததை கட்­டுப்­ப­டுத்த விசேட சட்ட ஏற்­பா­டு­களைக் கொண்­டு­வ­ரு­மாறும் இதன் போது ஜனா­தி­பதி ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

நேற்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் பாது­காப்பு சபைக்­கூட்டம் வழ­மைபோல் இடம்­பெற்­றது. இதன் போது தேசிய மட்­டத்தில் ஆரா­யப்­ப­ட­வேண்­டிய பல விட­யங்கள் ஜனா­தி­பதி முன்­னி­லையில் இடம்­பெற்­றன. இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற விசேட கூட்­டத்தில் ஜனா­தி­பதி அமைச்சர் மனோ கணேசன், சிறைச்­சா­லைகள், புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, தேசிய கலந்­து­ரை­யாடல் நீர் வழங்கல், வடி­கா­ல­மைப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சர் ரவூப் ஹகீம், கைத்­தொழில் மற்றும் வர்த்­தகத் துறை அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன்,

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன, மெகா­பொலிஸ் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரத்ன தேரர் ஆகி­யோ­ருடன் விஷேட கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை நடத்­தி­யுள்ளார். இதன் போது ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பி. பீ. அபேகோன், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர, இரா­ணுவ தள­பதி லெப்­டினன் கொமாண்டர் கிரி­ஷாந்த சில்வா, கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­தி­ர­வி­ஜே­கு­ண­வர்­தன, விமா­னப்­படை தள­பதி எயார் மார்ஷல் கபில ஜயம்­பதி ஆகி­யோரும் பாது­காப்பு படை­யி­னரின் பிர­தா­னி­யான எயார் சீப் மார்ஷல் கோலித குண­தி­லக உள்­ளிட்­டோரும் பங்­கேற்­றுள்­ளனர்.

இந்த கூட்­டத்தின் போது தற்­போது நாட்டில் அதி­க­ரித்­துள்ள இன­வாத சக்­தி­களின் ஆதிக்கம் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. அமைச்­சர்­க­ளான மனோ கணேசன், டி.எம்.சுவா­மி­நாதன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன் உள்­ளிட்­டோரால் சிறு­பான்மை சமூ­கங்­க­ளான தமிழ் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அதி­க­ரித்­துள்ள இன­வாத சக்­தி­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கு நேர­டி­யாக கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் மங்­க­ள­ரா­மய விகா­ரையின் விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர், பொது பல­சே­னாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஆகி­யோரின் கருத்­துக்கள் அச்­சு­றுத்தல் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­விட இன­வாத கருத்­துக்­களை தூண்­டி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமா அத்தின் செய­லாளர் அப்துல் ராசிக் மற்றும் இன­வாத செயற்­பாட்­டா­ள­ரான டான் பிரி­யசாத் ஆகி­யோரின் விட­யங்கள் குறித்தும் பேசப்­பட்­டுள்­ளன.

இதன்­போது இன­வாதம் ஊடாக அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்தும் நிகழ்ச்சி நிரல் தொடர்­பிலும் அதனால் நாட்டில் ஏற்­படப் போகும் பாதிப்­புக்கள் குறித்தும் அமைச்­சர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இதன் போது இன­வாதம் பேசுவோர் மற்றும் அதனை தூண்­டு­வோ­ருக்கு எதி­ராக கடு­மை­யான தண்­ட­னை­களை விதிக்கும் வித­மாக உரிய சட்ட ஏற்­பா­டு­களைக் கொன்­டு­வந்து அதனை தடுக்க நட­வ­டிக்­கைஎ டுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். இதன் போது தற்­போதும் அப்­பணி இடம்­பெற்று வரு­வ­தா­கவும் மிக விரை­வாக அச்­சட்டம் நடை­மு­றைக்கு வரும் வண்ணம் நட­வ­டிக்­கைகள் டுக்­கப்­படும் எனவும் நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ஜனா­தி­ப­தி­யிடம் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் தற்­போ­தைய சட்ட ஏற்­பா­டு­களின் பிர­காரம் இன­வாத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக ஒரு வருட சிறைத்­தண்­டனை வரை வழங்கும் ஏற்­பா­டுகள் உள்­ள­தா­கவும் நீதி­ய­மைச்சர் ஜனா­தி­ப­திக்கு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ர­வுக்கு விசேட உத்­த­ர­வினைப் பிறப்­பித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன­வாத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுவோர் மற்றும் அதனை தூண்­டு­வோ­ருக்கு எதி­ராக புதிய சட்டம் தயா­ராகும் நிலையில் தற்­போது அந் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக தற்­போ­தைய சட்­டத்தின் கீழ் தயவு தாட்­சண்யம் இன்றி உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார். இதனை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவும் ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

இதனைவிட இனவாதத்தை தூன்டும் இணையத்தளங்கள், சமூக வலைத்தள பக்கங்களை கண்காணிக்கும் விஷேட பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார். அவ்வாறானதொரு பொறிமுறைக்கான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பட்சத்தில் நாட்டில் உள்ள 99 வீதமான மக்கள் அதனை எதிர்க்கப் போவதில்லை எனவும் அவர்கள் அதற்கு ஆதரவே நல்குவர் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அதனால் அந் நடவடிக்கைகளை உடன் செயற்படுத்துமாறு ஆலோசனையும் வழங்கியுள்ளார்.