கிராம்பின் பயன்கள்

Published By: Digital Desk 7

21 Sep, 2022 | 11:09 AM
image

கிராம்பு ஒரு மருத்துவ மூலிகையாகும். இதனை மருந்து பொருளாகவும், சமையலில் நறுமணப் பொருளாகவும்  பயன்படுத்துகின்றனர் மக்கள். இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும். 

கிராம்பில் அடங்கியுள்ள சத்துக்கள்

கிராம்பில் கார்போவைத்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கல்சியம், பொஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், விட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

தயாரிப்புகள்

கிராம்பு சமையல் சுவையூட்டிகளான கறி மசாலா வகைகள் தயாரிப்பதற்கு மட்டுமன்றி வாசனைத்  திரவியங்கள், சோப்புத் தயாரிப்பிற்கும் பயன்படுகிறது.

கிராம்பு எண்ணெய்

கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து கிராம்பு எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்ச்சியை தருகிறது.

வலி நிவாரணி

வாய் துர்நாற்றம், பல் வலி இருப்பவர்கள் கிராம்பை எடுத்துக் கொள்ளலாம். இதன் நறுமணம் வாய் துர்நாற்றத்தை போக்குவதால் பற்பசைகளில் உபயோகபடுத்தபடுகிறது. இதிலுள்ள ‘யூஜெனோல்’ அழற்சியால் ஏற்படும் வீக்கம் போன்ற பாதிப்புகளை போக்குகின்றன. இது ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.

பாலியல் பிரச்சினைகளை தீர்க்கும்

விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவதை தடுக்கும். இது விந்து முந்துதலை தடுக்கும், மேலும் விந்து நீர்த்துப் போதல் போன்ற பிரச்சினைகளையும் போக்கும். விறைப்புத் தன்மைக் கோளாறு உள்ளவர்களுக்கும் இந்த கிராம்பு எண்ணெய் நல்ல தீர்வைத் தரும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதையும் தவிர்த்துவிடுவது நல்லது.

ஜீரண கோளாறுகள் தீரும்

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகள் சரியான அளவில் சுரக்க கிராம்பு உதவுகிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

வாந்தியை கட்டுப்படுத்தும்

கிராம்பை பொடி போல செய்து 1 டேபிள் ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள வேதிப்பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

தலைவலி குணமாகும்

பண்டைய கால மருத்துவமான யுனானி போன்றவற்றில் கிராம்பு தலைவலியை குணப்படுத்த பயன்படுகிறது. கிராம்பு எண்ணெய்யை தலையில் தடவுவது, பால், உப்பு போன்றவற்றில் கிராம்பு போட்டு குடிப்பது தலைவலிக்கு சிறந்த தீர்வாக. கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தலையில் தடவினால் தலைவலி குணமாகும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி விடுவதால் தலைபாரம் குறைந்து நிவாரணம் கிடைக்கும்.

நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கும்

வயிற்று போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற நோய்களை சரி செய்து வயிறு, குடல் ஆரோக்கியமாக இருக்க கிராம்பு உதவுகிறது. உடலின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

புற்றுநோயை தடுக்கும்

கிராம்பில் உள்ள வேதிப்பொருட்கள் ஆரம்ப நிலையில் உள்ள நுரையீரல் புற்றுநோயை தடுக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுண்கிருமிகளை எதிர்த்து போராடும்

கிராம்பு மற்றும் அதன் எண்ணெய் பக்டீரியா கிருமிகளை எதிர்த்து போராட கூடியது. வயிறு மற்றும் பற்களில் உள்ள பக்டீரியாக்களை வெளியேற்ற கூடியது கிராம்பு.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

உடலைப் பருமடையச் செய்யவும், உடலின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவவும், உடல் சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் கிராம்பு உதவுகிறது.

தொண்டை பிரச்சினைகள் தீரும்

சமையல் உப்புடன் கிராம்பை சப்பி சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு நீங்கும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பை சாப்பிட்டால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

சுவாச அழற்சி நீங்கும்

கிராம்பு எண்ணெயை மூன்று துளி எடுத்து அதனுடன் தேன் மற்றும் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04