பேர்ல் ஃபேஷியல்களுக்கு பார்லர்களில் விலை அதிகம்தான். இதுவே நீங்கள் வீட்டில் செய்தால், பேர்ல் பொடியோடு செலவு முடிந்துவிடும். பேர்ல் ஃபேஷியல் எந்த வித சருமத்துக்கும் ஒத்துப்போகும். இந்த சருமத்துக்குதான் போட வேண்டும் என்பதில்லை.
வீட்டிலேயே எப்படி பேர்ல் ஃபேஷியல் செய்வது?
முதலில் காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து உங்கள் முகத்தை சுத்தப்படுத்துங்கள். பழங்களின் ஃப்ளேவர் கொண்ட க்ளென்சர்களை பயன்படுத்த வேண்டாம். இவை முத்துடன் வினை புரியும். அவற்றை தவிருங்கள்.
முத்துப் பொடியுடன் சிறிது பால் கலந்து முகத்தில் போடுங்கள். குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் சிறிது ஒலிவ் எண்ணெயை கலந்து உபயோகப்படுத்தலாம். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
சாதாரணமாக நீங்கள் வீட்டில் உபயோகப்படுத்தும் க்ரீமுடன் சிறிது பேர்ல் பவுடரை கலந்து முகத்தில் 10 நிமிடங்கள் மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
அன்டி ஏஜிங் க்ரீம் எடுத்து, அதனுடன் சில துளி எலுமிச்சை மற்றும் பேர்ல் பவுடர் கலந்து முகத்தில் பெக்காக போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
இதுதான் கடைசி மசாஜ். சிறிது ஃப்ரெஷ் க்ரீம் எடுத்து, அதனுடன் சிறிது பேர்ல் பொடியை கலந்து, முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.
நன்மைகள்:
சூரியக் கதிர்களால் பாதிப்படைந்த சருமத்துக்கு மிகவும் நல்லது. பேர்ல் ஃபேஷியல் மென்மையான சருமத்தை அளிக்கிறது. சருமத்துளைகளை சுவாசிக்கச் செய்கிறது. இதனால் இறந்த செல்கள் எளிதாக வெளியேறி சருமம் இளமையாக இருக்கும். இது சுருக்கங்களை போக்கும். நச்சுக்களை வெளியேற்றி புதிய தோற்றத்தை சருமத்துக்கு தரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM