தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள SA 20 கிரிக்கெட் லீக் தொடரில் 3 இலங்கை அணி வீரர்கள்

By T Yuwaraj

21 Sep, 2022 | 06:09 AM
image

(எம்.எம்.எஸ்)

தெனாபிரிக்காவில் நடைபெறவுள்ள SA 20 கிரிக்கெட் லீக் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின்  மஹீஷ் தீக்சன, குசல் மெண்டிஸ், டில்ஷான் மதுசங்க ஆகிய  மூவர்  ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபையால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள SA20 தொடர் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போட்டித் தொடரில் டேர்பன் சுப்பர் ஜயண்ட்ஸ், எம்.ஐ கேப் டவுன்,  ஜோஹனர்ஸ் பேர்க் சுப்பர் கிங்ஸ், பார்ல் றோயல்ஸ், பிரிட்டோரியா கெப்பிட்டல்ஸ்,  சன் ரைஸர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.          

இப்போட்டித் தொடரில் பங்கேற்பதற்கான   வீரர்களுக்கான ஏலம் கடந்த திங்களன்று நடைபெற்றது. இதில் , 533 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர். 102 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டதில்,  மூன்று இலங்கையரும்  அடங்குகின்றனர்.

இதில், இடதுகை இளம் வேகப்பந்துவீச்சாளரான டில்ஷான் மதுஷங்கவை அவருக்கான நிர்ணயத்தொகையாக விதிக்கப்பட்டிருந்த 2 இலட்சத்து 75 ஆயிரம்  ரேண்ட்சுக்கு  டேர்பன் சுப்பர் ஜயண்ட்ஸ்   அணிக்காக வாங்கப்பட்டார். இலங்கை மதிப்பில் ஏற்குறைய 55 இலட்சம் ரூபாவாகும். அனுபவ வீரரான குசல் மெண்டிஸும் அவருக்கான நிர்ணயத்தொகையான 425,000 தென் ஆபிரிக்க ரெண்ட்சுக்கு பிரிட்டோரியா கெப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இது இலங்கை மதிப்பில் 86 இலட்சமாகும்.

மாயாஜால சுழற்பந்து வீச்சாளராக திகழும் மஹீஷ் தீக்சனவை ஏலத்திற்கு முன்னதாகவே அவரை ஜோஹனஸ் பேர்க் சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களது அணியில் தக்கவைத்துக்கொண்டது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச...

2022-09-26 09:29:13
news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18
news-image

தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும்...

2022-09-23 16:38:43
news-image

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி...

2022-09-23 09:34:57
news-image

107ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அஷேன்,...

2022-09-22 20:35:10
news-image

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு பெரும்பான்மை...

2022-09-22 15:17:50
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2022-09-21 22:58:49
news-image

2022 றக்பி விருது விழாவில் கண்டி...

2022-09-21 21:03:22