(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசினால் முன்வைக்கப்பட்ட தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையயில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற பிரதான நடவடிக்கைகளை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணையை சபையி சமர்ப்பி்தது ஆதரவு கோரி இருந்தார்.
இதன்போது கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சகல கட்சிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதால் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு விவாதத்தை நடத்தலாமென பிரதமர் தினேஷ் குணவர்தன கோரினார்.
எனினும் தீர்மானத்தை நிறைவேற்றாமலேயே இது தொடர்பான விவாதம் இடம்பெற்ற நிலையில் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தேசிய சபைக்கு எதிரவரும் 6மாதங்கள் வரைமட்டுமே .ஆதரவளிப்பதாகத் தெரிவித்தது. அதேநேரம் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, பேராசிரியர் பீரிஸ் தலைமையிலான பொதுஜன பெரமுனவின் சுயாதீன எதிர்க்கட்சி ஆகியன இதனை எதிர்ப்பதாக தெரிவித்தன.
தேசிய சபை தொடர்பில் தமக்கு நல்லெண்ணம் கிடையாதென விமல் வீரவன்ச அணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் விவாத நிரைவில் வாக்கெடுப்பு கோரப்படலாமென எதிர்பார்க்கப்பட்டபோதும் தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற யாரும் வாக்கெடுப்பு கோராத நிலையில் தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM