சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய சபையின் செயற்பாடு அமைய வேண்டும் - மைத்திரி

Published By: Vishnu

20 Sep, 2022 | 10:12 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டு மக்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணித்துள்ளார்கள். தேசிய மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய சபையின் கட்டமைப்பும் மற்றும் செயற்பாடுகளும் அமைய வேண்டும்.

தேசிய சபைக்கு சட்டத்தின் ஊடாக அதிகாரம் வழங்கப்படுதல் அவசியமாகும். சிறந்த கொள்கை திட்டத்தை முன்வைத்தால் ஆதரவு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றில் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய சபை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில், 

2019ஆம் ஆண்டுக்கு பின்  கொவிட் பெருந்தொற்று மற்றும் தவறான அரசியல் தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு கடந்த காலங்களை காட்டிலும் குறுகிய காலத்தில் தீவிரமடைந்தது.

தவறான தீர்மானங்களை திருத்திக்கொள்ளுமாறு பலமுறை ஆலோசனை வழங்கியும் அரசாங்கம் அதனை கவனத்திற்கொள்ளவில்லை.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியது.

அனைத்து தரப்பினரது ஆலோசனைக்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்திருந்தால் அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வை பெற்றிருக்கலாம். ஆனால் பல்வேறு காரணிகளினால் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் இல்லாதொழிக்கப்பட்டது.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் 15 கோரிக்கைகளை முன்வைத்தோம்.

எமது கோரிக்கைகளை தொடர்ந்து அவர் கடந்த மார்ச் மாதம் சர்வக்கட்சி மாநாட்டை நடத்தினார். ஒரு அரசியல் கட்சியை தவிர ஏனைனய அரசியல் கட்சிகள் அனைத்தும் சர்வக்கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டன.

சர்வக்கட்சி மாநாட்டின் தீர்மானத்திற்கமை சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குழு ஒன்றையும் நியமித்தார்.துரதிஷ்டவசமாக மார்ச் மாதம் முதல் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததால் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம் தடைப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழுவினர் இருமுறை சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவும்,தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உண்மை தன்மையுடனும்,பொறுப்புடனும் செயற்பட்டார்கள் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நாடுகள் பாராளுமன்றத்தை மையப்படுத்தி சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைத்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டவுடன்,தேர்தலுக்கு சென்றுள்ளன.

இந்த வழிமுறையை பின்பற்றவே முயற்சித்தோம்.சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் 3முறை பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டோம்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சரவை அமைச்சினை 20ஆக வரையறுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம் இருப்பினும் தற்போது அமைச்சரவை அமைச்சுக்களினதும்,இராஜாங்க அமைச்சுக்களினதும் எண்ணிக்கை வரையறையற்ற வகையில் விஸ்தரிக்கப்படுகின்றது .

ஊழல் மோசடி,வீண் செலவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ள போதும்  அதனை பொருட்படுத்தாமல் செயற்படுவது முறையற்றதாகும்.

வெளிநாட்டு கொள்கை நிச்சயம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய அரசியல் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும்.அடிப்படையில் மாற்றம் ஏற்படுத்தாமல் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேசிய சபையின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் சட்டமாக்கப்பட வேண்டும்.சட்டத்தின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.நாட்டு மக்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணித்துள்ளார்கள்.தேசிய மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய சபையின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடு காணப்பட்டால் ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56