(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
அனைவரும் இணைந்து செயற்பட்டால் உருவாக்கப்படவுள்ள தேசிய சபை மூலம் பொருளாதார பிரச்சினை உள்ளிட்ட இதர பிரச்சினைகளோடு இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என அமைச்சர் நசீர் அகமட் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதமரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய சபை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய சபை ஒன்றை அமைப்பதற்கான பிரேரணை சபையில் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பல சபைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இதுபோன்ற ஒரு சபை இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த சபை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும். ஒரு சட்ட வாக்கமாக இதனை செயற்படுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இதனை பயன்படுத்த முடியும்.
அத்துடன் பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் போதும் பிரதான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படாமலேயே உள்ளது.
இந்த நிலையில் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்படவுள்ள தேசிய சபை மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அதனால் அனைவரும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் முதலில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய ஒரு சபையாக இந்த தேசிய சபையை பார்க்க வேண்டும்.
இதன் மூலம் பொருளாதாரம், அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அதேவேளை இனப் பிரச்சினைக்கான தீர்வையும் இதன் மூலம் காண முடியும். அதற்கான யோசனைகளை சம்பந்தப்பட்டவர்கள் இதில் முன் வைக்கலாம்.
அதனால் காலங்களை வீணடிக்காமல் உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM