டொம் மூடி பதவியை விட்டு விலக தீர்மானம்

By Digital Desk 5

20 Sep, 2022 | 05:00 PM
image

(என்.வீ.ஏ.)

கிரிக்கெட் பணிப்பாளராக பதவி வகித்துவந்த டொம் மூடி, அப் பதவிக்கான ஒப்பந்தத்திலிருந்து உடன் அமுலுக்கு வரும்வகையில் விலகிக்கொள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பரஸ்பர உடன்பாட்டுக்கு வந்தது.

டொம் மூடி நேரடியாக அறிவிக்கவேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தற்போது நீக்கப்பட்டுள்ளதால் அவரது சேவை தேவையில்லை என்பதை நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு கருதியதன் அடிப்படையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் சிபாரிசின் பேரில் கிரிக்கெட் பணிப்பாளராக 2021 மார்ச் 1ஆம் திகதி டொம் மூடி நியமிக்கப்பட்டார்.

டொம் மூடி அவரது பதவிக் காலத்தில் இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறைக்கு வழங்கிய பங்களிப்புக்கு நன்றி கூறிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம், அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி அளிக்க வேண்டும் என வாழ்த்தியது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் மீண்டும் இணைந்து செவையாற்ற கிடைத்ததை ஒரு பாக்கியமாக கருதுவதாக குறிப்பிட்ட டொம் மூடி, தொழல்நுட்ப ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலுக்கு அமைய தனது பதவிக் காலத்தில் சாதிதத்தையிட்டு பெருமை அடைவதாக  டொம் மூடி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச...

2022-09-26 09:29:13
news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18
news-image

தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும்...

2022-09-23 16:38:43
news-image

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி...

2022-09-23 09:34:57
news-image

107ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அஷேன்,...

2022-09-22 20:35:10
news-image

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு பெரும்பான்மை...

2022-09-22 15:17:50
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2022-09-21 22:58:49
news-image

2022 றக்பி விருது விழாவில் கண்டி...

2022-09-21 21:03:22