நீண்டகால முதலீடுகள் மூலம் இலங்கைக்கு ஆதரவு - இந்தியா

By Rajeeban

20 Sep, 2022 | 03:51 PM
image

இலங்கைக்கு நீண்ட கால முதலீடுகள் மூலம் ஆதரவளிக்கப்போவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

தனது அயல்நாடு ஏழு தசாப்தகாலத்தில் ஒருபோதும் இல்லாத  பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதை தொடர்ந்து இந்த வருடம் 4 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியுள்ள இந்தியா எதிர்காலத்தில் நீண்ட கால முதலீடுகள் மூலம் இலங்கைக்கு உதவப்போவதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை தொடர்ந்து இலங்கையின் பொருளாதார நிலைமை ஒரளவு ஸ்திரதன்மைக்கு திரும்ப தொடங்கியுள்ளதால் இலங்கைக்கு புதிய நிதிஉதவியை வழங்கும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை என ரொய்ட்டர் கடந்த வாரம் செய்தி வெளியி;ட்டிருந்தது.

இந்நிலையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்  சாத்தியமான வழிமுறைகள் மூலம் நாங்கள் இலங்கைக்கு உதவுவோம் குறிப்பாக இலங்கை விரைவில் பொருளாதாரமீட்சி வளர்ச்சியை அடைவதற்காக முக்கிய பொருளாதார துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்போம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்தியாவின் 3.5 பில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்கின்றனஎனவும் உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

இந்தியா ஆதரவுடனான அபிவிருத்தி திட்டங்களிற்கான தடைகளை நீக்குமாறு இலங்கை ஜனாதிபதி கடந்த வாரம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07
news-image

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை...

2022-12-08 18:17:53