உக்ரைனில் ரஸ்யாவின் அட்டூழியத்தில் இருந்து இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டனர்

By Rajeeban

20 Sep, 2022 | 03:28 PM
image

By Sofia Bettiza
BBC News, Kharkiv, Ukraine

இசியம் நகரை உக்ரைன் படையினர் மீளக்கைப்பற்றியதை தொடர்ந்து ரஸ்யாவின் ஆக்கிரமி;ப்பின் கீழ் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

இதில் பல மாதங்களாக சிறைபிடித்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் அனுபவங்களும் உள்ளன 

அவர்கள் தங்கள் அனுபவங்களை இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

நாங்கள் உயிருடன் தப்புவோம் என ஒருபோதும் கருதவில்லை என்கின்றார் திலுஜன் பத்திஜகன் .

மே மாதம் ரஸ்ய படையினர் கைதுசெய்த பல இலங்கையர்களில் இவரும் ஒருவர்.

உக்ரைனின் வடகிழக்கில் உள்ள குப்பியான்ஸ்கிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கார்க்கிவிற்கு இவர்கள் நடந்து செல்ல முயன்றனர் - பாதுகாப்பிற்காகவே இவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் இவர்கள்  சந்தித்த முதல் சோதனை சாவடியிலேயே ரஸ்ய படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இலங்கையர்களின் கண்கள் மூடப்பட்டன,கைகள் கட்டப்பட்டன - ரஸ்ய எல்லையில் உள்ள வொவ்சான்ஸ்கின் தொழிற்சாலையொன்றிற்கு  ரஸ்ய படையினர் இவர்களை கொண்டு சென்றனர்.

அது நான்கு மாத பயங்கரத்தின் ஆரம்பமாக காணப்பட்டது-இந்த காலப்பகுதியில் அவர்கள் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர் சித்திரவதை செய்யப்பட்டனர்.

உக்ரைனிற்கு கல்வி வேலைக்காக வந்தவர்கள் தற்போது சிறைக்கைதிகளாக மாறியிருந்தனர்- சிறிதளவு உணவில் உயிர் வாழவேண்டிய நிலையில் காணப்பட்டனர் நாளொன்றிற்கு இரண்டுநிமிடங்கள் மாத்திரம்கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.

ஆண்கள் தனியாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் - ஒரேயொரு பெண் 50 வயது மேரி எடிட் உதயகுமார் தனியாக அடைக்கப்பட்டார்.

 

அவர்கள்ஒரு அறையில் போட்டு பூட்டினார்கள் என தெரிவித்த அவர் நாங்கள் குளிக்க செல்லும்போது அவர்கள் எங்களை தாக்குவார்கள் ஏனையவர்களை சந்திக்க கூட அவர்கள் அனுமதி வழங்கவில்லை மூன்று மாதம் உள்ளேயே முடங்கிக்கிடந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேரி ஏற்கனவே இலங்கையில் கார்குண்டுவெடிப்பில் சிக்கி முகத்தில் தழும்புகளுடன் காணப்படுபவர், இருதய நோய் பாதிப்பிற்குள்ளான ஒருவர் ஆனால் அவருக்  எந்த மருந்தும் கிடைக்கவில்லை.

ஆனால் தனிமையே அவர்களை அதிகளவு பாதித்தது.

தனியாகயிருந்ததால் நான் பதற்றத்துடன் இருந்தேன் நான் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்து மாத்திரைகளை தந்தார்கள் ஆனால் நான் அவற்றை பாவிக்கவில்லை என மேரி தெரிவித்தார்.

ஏனையவர்கள் தாங்கள் அனுபவித்த விடயங்களிற்கான  கண்ணிற்கு தென்படும்  அடையாளங்களை கொண்டுள்ளனர்.

ஒருவர் தனது பாதணிகளை அகற்றி தனது கால் நகத்தை பிடுங்கியமைக்கான அடையாளத்தை காண்பித்தார்.

மற்றுமொரு நபரும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளார்.

எந்த காரணமும் இன்றி தாங்கள் தாக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மது அருந்திய ரஸ்ய படைவீரர்கள் போதையில் அவர்களை தாக்கியுள்ளனர்.

அவர்கள் எனது உடலில் பல தடவை துப்பாக்கியால் தாக்கினார்கள் என 35 வயது தினேஸ் கோகேந்திரன் தெரிவித்தார்.

ஒருவர் எனது வயிற்றி;ல் குத்தினார் நான் இரண்டு நாட்களாக கடும் வலியால் அவதிப்பட்டேன் என அவர் தெரிவித்தார்.வயிற்றி;ல்குத்திய பின்னர் அவர் பணம் கேட்டார் என அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் கடும் கோபத்திலும் துயரத்திலும் காணப்பட்டோம் ஒவ்வொரு நாளும் அழுதோம் என 25 வயது திலுக்சன் ரொபேர்ட் கிளைவ் தெரிவித்தார்.

ரஸ்யா யுத்த குற்றச்சாட்டுகளை  நிராகரித்துள்ளது

எனினும் இலங்கையர்கள் சித்திரவதை செய்யப்பட்ட  குற்றச்சாட்டுடன் வேறு பல யுத்த குற்றச்சாட்டுகளும்  வெளியாகியுள்ளன.

இசியத்தில் காட்டிற்கு அருகில் உள்ள  மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை உக்ரைன் ஆரம்பித்;துள்ளது,உடல்களில் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

விடுவிக்கப்பட்டுள்ள கார்கிவ் நகரின் பல பகுதிகளில் பத்து சித்திரவதை கூடங்களை கண்டுபிடித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வொவ்சான்ஸ்க் உட்பட கிழக்கு உக்ரைனை உக்ரைன் இராணுவம் மீட்கத்தொடங்கியவேளையே இலங்கையர்களின் விடுதலை  சாத்தியமானது.

மீண்டும் இவர்கள் கார்கிவ் நோக்கி தனியாக கைத்தொலைபேசியும் இன்றி நடக்கதொடங்கினார்கள் .தங்கள் குடும்பத்தவர்களை தொடர்புகொள்வதற்கு எந்த வழியும் அவர்களிற்கு இருக்கவில்லை.

இறுதியில் அவர்களிற்கு அதிஸ்டம் காத்திருந்தது நெடுஞ்சாலையில் அவர்களை கண்ட ஒருவர் பொலிஸாரை அழைத்தார்,ஒருவர் அவர்களிற்கு தனது கையடக்க தொலைபேசியை வழங்கினார்.

40 வயது ஐங்கரநாதன் கணேசமூர்த்தி தனது மனைவியினதும்  மகளினதும் முகத்தை தொலைபேசியில் பார்த்தவுடன் கண்ணீர் விட்டதாக தெரிவித்தார்.

ஏனையவர்களும் அழைத்தனர் கண்ணீர்கள் அழுகைகள் தொடர்ந்தன அவர்கள் பொலிஸ் தலைமை அதிகாரியை கட்டித்தழுவினர்- அவரை ஆச்சரியப்படுத்தினர்.

அவர்களை அதிகாரிகள் தற்போது கார்கிவிற்கு அழைத்து சென்றுள்ளனர் அவர்களிற்கு மருத்துவ பராமரிப்பும் ஆடைகளும் வழங்கப்படுகின்றன.

நாங்கள் தற்போது மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளோம் என்கின்றார் திலுக்சன்.

 

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்