இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடரும்

Published By: Vishnu

20 Sep, 2022 | 09:38 PM
image

நுகர்வோர் செலவினங்களில் கூர்மையான எழுச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை அடுத்த மாதங்களில் இந்திய பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கும் என்று இந்திய அரசின் ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் நுகர்வு அதிகரிப்பு மற்றும் அதிக திறன் பயன்பாட்டு விகிதங்கள் கடந்த தசாப்தத்தில் தனியார் துறை மூலதனச் செலவுகள் அதன் மிக உயர்ந்த மட்டங்களில் ஒன்றை அடைய உதவியது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் அரச செலவீனங்கள் 35 சதவிகிதம் அதிகரித்ததன் மூலம் வணிக முதலீடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கான வரி வருவாய் வளர்ச்சி உற்சாகமாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவிலான அந்நியச் செலாவணி இருப்பு, நீடித்த அந்நிய நேரடி முதலீடு மற்றும் வலுவான ஏற்றுமதி வருவாய் ஆகியவை மேம்பட்ட பொருளாதாரங்களில் நிதி கொள்கையை இயல்பாக்குவதற்கும் மற்றும் புவிசார் அரசியல் மோதலால் எழும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை விரிவுபடுத்துவதற்கும் ஒரு நியாயமான இடையகத்தை வழங்கியுள்ளது.

2023 மார்ச் வரை நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்குள் இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

வளர்ச்சியை திடீரென நிறுத்தாமல் அதன் பணப்புழக்க அளவுகளை அளவீடு செய்வதில் இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. நாட்டில் பணவீக்க அழுத்தங்கள் குறைந்து வருவதாக அறிக்கை குறிப்பிடுகின்றது. ஆனால் குளிர்கால மாதங்களில், எரிசக்தி பாதுகாப்பில் சர்வதேச கவனம் செலுத்தப்படுவதால், புவிசார் அரசியல் பதட்டங்கள் உயரக்கூடும். இது இந்தியாவின் ஆற்றல் தேவைகளையும் இதுவரை கையாளும் திறமையையும் சோதிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52