(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இனவாதத்திலிருந்து மீண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தேசிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். உங்களது ஒத்துழைப்பினை நாம் எதிர்பார்க்கின்றோம் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது முன்னைய  காலங்களில் தமிழ் கட்சிகள் புறக்கணிக்கப்பட்டன. எனினும் வரலாற்றில் முதற் தடவையாக தமிழ் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் புதிய அரசியலமைப்பு தயாரிப்பு வேலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று 2017ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தின் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே    அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.