பூனையை சமைத்து உட்கொண்ட நபர் கைது

Published By: Vishnu

20 Sep, 2022 | 01:17 PM
image

இந்­தோ­னே­ஷி­யா­வி­லுள்ள நபர் ஒருவர், பூனை­யொன்றை கொலை செய்து, சமைத்து உட்­கொண்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

26 வய­தான இச்­சந்­தேக நபர், இந்­தோ­னே­ஷி­யாவின் வடக்கு பெங்க்­குலு நகரில் வைத்து கைது செய்­யப்­பட்டார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். 

தனது செல்­லப்­பி­ரா­ணி­யாக வளர்த்து வந்த, கர்ப்பம் தரிந்­தி­ருந்த பூனை­யொன்­றையே இந்­நபர் கொலை செய்­த­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நபர்  மேற்­படி சம்­ப­வத்­தின்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோவை இணை­யத்தில் வெளி­யிட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதை அவ­தா­னித்த ஒருவர், பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கினார். அதை­ய­டுத்து 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் மேற்­படி நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மேற்­படி சந்­தேக நபர் குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டுள்ளார் எனவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். 

பூனை இறைச்­சியை உட்­கொள்ள வேண்டும் என்ற ஆசை­யினால் இந்­ந­ட­வ­டிக்­கையில் தான் ஈடு­பட்­ட­தாக மேற்­படி நபர் கூறி­யுள்ளார். 

இச்­சந்­தேக நபரை மன­நல வைத்­தி­ய­சா­லை­யொன்றில் 14 நாட்கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­திய பின்னர் அவ­ருக்கு எதி­ராக வழக்கு சட்ட நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்­கப்­படும் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­தோ­னே­ஷி­யாவின் மிருக வதை தடுப்புச் சட்­டத்தின் கீழ், சந்­தேக நப­ருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் குற்றவாளியாக காணப்பட்டால் 9 மாதங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை...

2026-07-21 15:50:13
news-image

கயானா படகு விபத்து; 27 பேரின்...

2026-07-21 11:41:07
news-image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 20...

2026-07-21 10:34:42
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -...

2026-07-21 10:32:37
news-image

வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ்...

2026-07-21 10:17:03
news-image

பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் அண்டி பர்ன்ஹாம்

2026-07-20 17:26:16
news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23