திலீபனின் நினைவேந்தல் ஒரு மக்கள் எழுச்சியாக முன்னெடுக்கப்படும் - வேலன் சுவாமி

Published By: Vishnu

20 Sep, 2022 | 12:22 PM
image

இம்முறை திலீபனின் நினைவேந்தல் நிகழ்வானது மக்களின் எழுச்சியாக மக்களின் புரட்சியாக முன்னாள் முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார் இன்றைய தினம் (20) திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தியாக தீபம் திலீபன் அவர்களுடைய நினைவேந்தலை  முன்னெடுக்கும்  முகமாக தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று இணைந்து ஒற்றுமையாக இந்த நினைவேந்தலை ஒரு மக்கள் எழுச்சியாக புரட்சியாக முன்னெடுக்கும் விதமாக இன்றைய தினம் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில தியாக தீபம் நினைவேந்தலினை ஒழுங்கு செய்கின்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது 15 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.

அந்த நிகழ்வினை முன்னெடுக்கின்ற பொது கட்டமைப்பதற்காக நாங்கள் தியாக தீபம்   திலீபனுடைய நினைவுகளில் எந்தவித முரண்பாடும் இன்றி யாரும் எந்தவித சுய லாபத்திற்கும் இதனை பயன்படுத்தாத விதத்திலே ஒட்டுமொத்த தமிழினமாக விடுதலைக்கான பயணமாக முன்னெடுப்பதற்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் இதய சுத்தி ஓடும் இலட்சியப்பற்றோடும் முன்னெடுக்க இருக்கின்றோம்.

நினைவேந்தல் கட்டமைப்பிலே மதத் தலைவர்கள் பல்கலைக்கழக மாணவருடைய பிரதிநிதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய  பிரதிநிதிகள் மாவீரர்களினுடைய பெற்றோர்கள் முன்னாள் போராளிகள் அரசியல் கைதிகளினுடைய பிரதிநிதிகள் விஞ்ஞான ஆய்வு மன்றத்தினுடைய பிரதிநிதி போன்ற பலர் பொதுகட்டமைப்பிலே உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.

தீபகவிருட்சம்  அமைப்பு சார்ந்த பிரதிநிதியும் கட்டமைப்பிலே உள்ளடக்கப்பட்டுள்ளார் 

அந்த வகையிலே காலத்தின் தேவை கருதி விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்றைய கூட்டம் இந்த கட்டமைப்பு தேர்வில் நிறைவடைந்து இருக்கின்றது.

இப்போதில்  இருந்து இந்த கட்டமைப்பானது தன்னுடைய ஒருங்கிணைப்பு பணிகளை முன்னெடுக்க இருக்கின்றது அந்த விதத்திலே கட்சித் தலைவர்களை சந்தித்து ஏனைய மக்கள் ஆதரவை பெற்று எவ்வாறு இந்த நிகழ்வின் முன்னெடுக்கலாம் என்பது பற்றி நாங்கள் தொடர்ச்சியாக செயல்பட இருக்கின்றோம்.

 நினைவேந்தல் இம்முறை மிகவும் சிறப்பாக இடம் பெற வேண்டும் எங்களுடைய உறவுகள் அனைவரும் இதற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும் மிக எழுச்சியாக அனைவரும் இம்முறை இந்த எழுச்சியினை காட்ட வேண்டும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். என்ற கோட்பாட்டுக்கு அமைய  மக்களுடைய எழுச்சி எப்பொழுது ஏற்படுகின்றதோ எங்களுடைய விடுதலை இனத்தினுடைய விடுதலை அனைத்துமே சாத்தியமாகும் என்பது தான் நிதர்சனமான உண்மை அந்த அடிப்படையிலே இந்த பொது கட்டமைப்பு செயல்பட்டு திலீபனின் நினைவேந்தலை மிக சிறப்பாக நினைவு கூறும் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25