ஏமாந்துவிட்டேனோ ! 

Published By: Digital Desk 7

20 Sep, 2022 | 11:31 AM
image

கேள்வி:  

நான் ஒரு பெண். வயது 30. கணவருக்கு 39. காதல் திருமணம். மூன்று குழந்தைகள். கடந்த சில வருடங்களாக வீட்டில் வறுமை உட்பட பல பிரச்சினைகள்.

இதனால் தாம்பத்தியமோ, அன்பான வார்த்தைகளோ எதுவும் இல்லை. இந்த நிலையில் தொழில் ரீதியாக ஓர் ஆணின் அறிமுகம் கிடைத்தது.

நான் அடிக்கடி அவருடன் கதைத்தேன். இப்படியே என் மனதையும் உடலையும் அவரிடம் பறிகொடுத்தேன், தவறுதான் என்று தெரிந்தும்! ஆனால், என் குடும்பத்தின் மீதான எனது அன்பு கொஞ்சமும் குறையவில்லை.

என்றாலும், அவருடன் பேசாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனால், அவரோ இப்போது சுருக்கமாக கதைத்துவிட்டு, வேலை இருக்கிறது என்று தொடர்பை துண்டித்துவிடுகிறார். நான் ஏமாந்துவிட்டேனோ என்று எண்ணித் தவிக்கிறேன். இதற்கு ஒரு தீர்வை சொல்வீர்களா?

பதில்: 

உங்கள் நிலை மிக நன்றாகவே புரிகிறது. சூழ்நிலைக் கைதியாகிவிட்டீர்கள். அவ்வளவுதான்! 

இதுபோன்ற தவறான உறவுகளின்போது, தன்னை விரும்பும் ஆண் தம் மனதைத்தான் விரும்புகிறான் என்று தவறாக எண்ணுவதை பெண்கள் நிறுத்த வேண்டும்.

இது போன்ற உறவுகளின்போது ஆண்கள் தேனீக்கள் ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்கு தேவை பூக்களில் இருக்கும் தேன்தானேயன்றி, பூவல்ல! இதை நீங்கள் உணர்ந்துகொண்டால், உங்களது வேதனை குறைய வாய்ப்புண்டு.

காதல் திருமணம்தான் என்றாலும் வாழ்க்கையை நடத்த வருமானம் வேண்டும். அது இல்லாத பட்சத்தில் அங்கு காதலுக்கும் கலவிக்கும் இடமில்லை என்பது யதார்த்தமே! 

இந்த நிலையில், உங்களது வயது மற்றும் சூழ்நிலை அடிப்படையில் உங்களது தவறு மன்னிக்கப்படலாம். என்றாலும், இது தொடராத வண்ணம் பார்த்துக்கொள்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.

அவர் உங்களது தொடர்பை தவிர்ப்பதும் இதற்கான நல்ல வாய்ப்பே. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீங்கள் செய்த தவறிலிருந்து வெளிவர முயற்சியுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்