வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு கோரி முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் திட்டத்தின் 50-வது நாளில் இன்று (19) வடக்கு கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்ற தொனிப் பொருளில் 100 நாள் தொடர் போராட்டம் ஒன்றை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்து வருகின்றது.
இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை உள்ளிட்ட வடகிழக்கினுடைய 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 50ஆவது நாளினை பூர்த்தி செய்கின்ற நிலையில் வடகிழக்கினுடைய 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் இந்த குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தீர்த்தக்கரை பிரதேச கடற்கரையில் 100 நாள் செயல் திட்டம் என்கின்ற பாரிய பட்டம் ஒன்றினை ஏற்றி குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM