மழையுடனான காலநிலையால் அதிவேக வீதிகளில்  பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு, அதிவேக வீதிகள் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார். 

தெற்கு அதிவேக வீதியின் தொடாங்கொடையில் இருந்து, கெலனிகம வரையிலும், கஹதுடுவை மற்றும் கொட்டாவை மாற்றல்களிலும் அதிக பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பயணிக்குமாறும், வாகனத்தின் முன் - பின் விளக்குகளை ஒளிரவிடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.