இலங்கையில் “நந்தவனம்” அறிமுகம்

By Vishnu

19 Sep, 2022 | 04:29 PM
image

திருச்சிராப்பள்ளி இனிய நந்தவனத்தில் வெள்ளிவிழா இதழான "இனிய நந்தவனம்" மலரின் நூல் அறிமுகவிழா கொழும்பு தமிழ் சங்க  சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தலைவர் வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன் தலைமையில் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்வில் நூலின் முதல் பிரதியை மலையக மக்கள் முன்னனி உப தலைவர், ஆய்வாளர் சதீஷ்குமார் சிவலிங்கம் வெள்ளிவிழா மலரின் முதல் பிரதியை தலைவர் ஞானசேகரனிம் இருந்து பெற்றுக்கொள்வதையும் அருகில் மலரின் முன் படமாக இடம்பெற்ற இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், இனிய நந்தவனம் சந்திரசேகரன், முனைவர் அன்பு சிவா "சாகித்தியரத்னா" மு. சிவலிங்கம், டாக்டர். ரஞ்சனி சுப்பிரமணியம், வீரகேசரி நாளிதழ், ஞாயிறு இதழ் ஆசிரியர் எஸ். ஸ்ரீ கஜன், தினகரன் பிரதம ஆசிரியர் தெ. செந்தில் வேலவர், உடுவை தில்லை நடராஜா ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, முனைவர் அன்பு சிவா ஆகியோர் அருகில் நிற்பதையும், இனிய நந்தவனம் சந்திரசேகரனுக்கு"மொழிக்காவலர்" விருது வழங்கி கௌரவிக்கப்படுவதையும்,  மேடையில் பிரமுகர்கள் அமர்ந்திருப்பதையும், விக்கிரமசிங்க,யாழ் நங்கை அன்னலட்சுமி இராஜதுரைக, வதிரி இரவீந்திரன் ஆகியோர் வெள்ளிவிழா மலர் பெற்றுக்கொள்வதையும் காணலாம்.

( படப்பிடிப்பு :  - எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்