முட்டை உற்பத்தியை கைவிடும் நிலை - அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம்

Published By: Vishnu

19 Sep, 2022 | 01:50 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் பண்ணையாளர்கள் அநேகமானோர் முட்டை உற்பத்தியை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் எச்.எம்.பீ. அழஹகோன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் பண்ணையாளர்கள் அநேகமானோர் முட்டை உற்பத்தியை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரச வர்த்தமானியை வெளியிடும் போது குறித்த தரப்பினர் சிலர் எங்களுடன் கலந்துரையாடினார்கள்.

முட்டைஒன்றினை  43 ரூபா மற்றும் 45 ரூபாவிற்கு விற்குமாறு சில்லறை விலையை நிர்ணயித்தார்கள். நாம் அதை எதிர்த்து இவ்வாறு செய்யும் போது பண்ணைகளை கைவிடும் நிலை ஏற்படும் என்று கூறினோம். இருப்பினும் தான்தோன்றித்தனமாக வர்த்தமானியை வெளியிட்டார்கள். அதன் விளைவாக இன்று இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்த நிலையில், கோழி பண்ணையாளர்கள் இது தொடர்பாக கூறுகையில் கோழி தீவனம் மற்றும் ஏனைய பொருட்கள் விலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எம்மால் அரசாங்கம் கூறும் விலையில் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாது.தற்போது பண்ணைகளில் உள்ள 40 வீதமான கோழிகளை அகற்றினோம். 

அந்த கோழிகளுக்கு தேவையான தீவனப் பொருட்கள் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமமே இதற்குப்  பிரதான காரணமாகும்.குருநாகல் மாவட்டத்தில் உள்ள மாவத்தகம, ஹெட்டிபொல, வாரியபொல, குளியாப்பிட்டிய போன்ற ஆகிய பகுதிகளில் உள்ள கோழி பண்ணையாளர்கள் தமது தொழிலை கைவிட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04
news-image

ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை: சிறைச்சாலை...

2026-08-08 06:14:24
news-image

துஷ்பிரயோக நோக்கங்களைக் கொண்ட நபர்கள், கைதிகளை...

2026-08-08 06:11:13
news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00