மகாராணியின் தலைஅருகில் குனிந்து பிரார்த்தனைகளை தெரிவித்தேன் - அவரது சிறந்த சேவைக்கு நன்றி தெரிவித்தேன் - மகாரணியின் உடலிற்கு முதலில் அஞ்சலி செலுத்திய தமிழ் பெண்

By Rajeeban

19 Sep, 2022 | 11:57 AM
image

இரண்டாவது எலிசபெத் மகாராணிக்கு வெஸ்ட் மினிஸ்டர் ஹோலில் முதலில் அஞ்சலி செலுத்தியவரான வனேசா நந்தகுமாரன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியது தனது கணவரை இழந்த வேதனையிலிருந்து மீள்வதற்கு உதவியது என குறிப்பிட்டுள்ளார்.

லண்டனின் வடமேற்கு ஹரோவை சேர்ந்த வனேசா நந்தகுமாரன் மகாராணியின் பூதவுடலை பார்ப்பதற்காக இல் Albert Embankment 50 மணித்தியாலங்கள் காத்திருந்தார்.

Lambeth Bridge பகுதியை சென்றடைந்ததும் பீஏ செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்த அவர் வனேசா 56- தனது கணவர் கடந்த பெப்ரவரியில் உயிரிழந்தார் என குறிப்பிட்டார்.

மகாராணியின் உடலை பார்ப்பதற்கு பொதுமக்களிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை குறித்து சிறப்புரிமை  வழங்கப்பட்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் நான் எனது வாழ்நாள் முழுவதும் இதனை நினைவில் வைத்திருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரின் ஏழாம் மாத நினைவுதினத்திற்காக அவர் உணவு தயாரித்துக்கொண்டிருந்தவேளை 8ம் திகதி மகாராணியின்மறைவு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

எனது கணவரை நான் பெப்ரவரியில் இழந்தேன் மகாரணியின் பூதவுடலை பார்ப்பது எனது துயரத்தை மறைக்க உதவியுள்ளது என அவர் பீஏசெய்தி ஸ்தாபனத்திடம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் வரிசையில் நின்றதும் ஊடகங்களால் பேட்டி எடுக்கப்பட்டதும் வித்தியாசமான அனுபவம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

மகாராணியின் பூதவுடலை பார்த்த முதல் நபர் என்பதும் வரலாற்றுடன் சிறிது தொடர்புபடுத்தப்பட்டுள்ளமையும் மகிழ்ச்சியளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நான் எனது வாழ்நாள் முழுவதும்;இதனை நினைத்துப்பார்ப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

என்னால் இதனை இன்னமும் நம்பமுடியவில்லை - நான் இதனை செய்தேன் என்பதை நம்பமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இரண்டு நாட்களை ஆகிய பகுதிகளில் Anne Daley,  Grace Gothard,   என்பவர்களுடன் செலவிட்டார் மகாராணியின் உடலை இரண்டாவது மூன்றாவதாக பார்த்தவர்கள்..

அனைவரும் மிகவும் சினேகபூர்வமாக நட்புடன் நடந்துகொண்டார்கள் என தெரிவித்த நந்தகுமாரன் தொண்டர்களும் பொலிஸாரும் ஏனையவர்களும் உணவு தேநீர் போன்றவற்றை கொண்டுவந்தார்கள் தங்குவதற்கு ஒரு கஜெபோவை கூட தந்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை அனைத்தும் சரியாக காணப்பட்டது ஆனால் செவ்வாய்கிழமை மழை பெய்ய ஆரம்பித்தது என தெரிவித்துள்ள வனேசா மழையே வெயிலோ எங்கள் விசேடமான மகாராணிக்காக  காத்திருப்பது பெறுமதியான விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் இது வாழ்க்கையில்ஒரு தடவை மாத்திரம் கிடைக்ககூடிய விடயம் நாங்கள் அவரை மீண்டும் பார்க்கப்போவதில்லை என குறிப்பிட்டார்.

வெஸ்ட்மினிஸ்டர் ஹோலிற்குள் நுழைந்தவுடன் நான் பதற்றமடைந்தேன்  அஞ்சலி செலுத்தும் முதல் நபர் என்ற விடயத்தின் பாரம் என்னை தாக்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அங்கு சென்றதும் எனது உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டேன் நான் உணர்ச்சிவசப்பட்டவளாக அங்கு செல்லவிரும்பவில்லை உரிய முறையில் நடந்துகொள்ள விரும்பினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு அனைத்தும் அமைதியாக காணப்பட்டது நான் மாத்திரம்அங்கிருப்பது  போல உணர்ந்தேன்   அது மிகவும் துயரமான அனுபவம் மிகவும் உணர்வுபூர்வமாக காணப்பட்டது எனவும் வனேசா தெரிவித்துள்ளார்.

மகாராணியின் தலை அருகில் குனிந்து பிரார்த்தனைகளை தெரிவித்தேன் அவரது சிறந்த சேவைக்கு நன்றி தெரிவித்தேன் எனவும் திருமதி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அவரை கடந்து சென்றபோதுதான் மகாராணி எங்களை விட்டு சென்றுவிட்டார் என்ற உண்மை என்னை தாக்கியது அது உண்மை       நாங்கள் மீண்டும் ராணியை பார்க்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

                                   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்