திலீபன் வழியில் வருகிறோம் ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மக்கள் அஞ்சலி

Published By: Vishnu

19 Sep, 2022 | 12:00 PM
image

சண்முகம் தவசீலன்

திலீபன் வழியில் வருகிறோம்   ஊர்தி பவனி இன்று (19) முல்லைத்தீவை சென்றடைந்த நிலையில், அங்கு மக்கள் திரண்டு அஞ்சலிசெலுத்தியதுடன் முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு நல்லூரில் பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஷ்டக்கப்படுகிறது.

இந்நிலையில் திலீபனின் கோரிக்கைகள் மற்றும் செயற்ப்பாட்டினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் கடந்த 15.09.2022 அன்று பொத்துவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த திலீபன் வழியில் வருகிறோம் என்ற  ஊர்தி பவனி இன்று முல்லைத்தீவை சென்றடைந்தது.

திருகோணமலையில் இருந்து தமிழர் தாயகமான மணலாறு பகுதியை கடந்து முல்லைத்தீவுக்கு சென்றடைந்த ஊர்திக்கு செம்மலை அளம்பில் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு நகர் பகுதிக்கு வருகை தந்த ஊர்திக்கு முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மக்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை ஊர்தி சென்றடைந்து அங்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு ,கைவேலி, வள்ளிபுனம், உடையார்கட்டு, விசுவமடு பகுதிகளில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஊர்தி வவுனியா மாவட்டம் நோக்கி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29