வன்முறைகள் வேண்டாம் : முறையாக போராடுவோம் - ராமேஷ்வரன்

Published By: Digital Desk 5

19 Sep, 2022 | 10:59 AM
image

(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா பிளாண்டேசனானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வகையில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாற்று நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலை எமக்கு ஏற்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற எம்.பியுமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று (18) மஸ்கெலியா அம்பாள்ஸ் மண்டபத்தில் குறித்த தோட்ட தொழிலாளர்களை பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர், தவிசாளர் உறுப்பினர்கள், ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 

“ மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனியே மிக மோசமான நிறுவனமாக உள்ளது. நஷ்டம், நஷ்டம் எனக் கொக்கரிக்கும் சில கம்பனிகள், நஷ்டம் என்றால் எதற்கு தொடர்ந்தும் இயங்க வேண்டும்? தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம் அல்லவா? நிர்வாகங்கள் இலாபம் உழைக்கின்றன. ஏமாற்று வித்தையாகவே நஷ்டம் என்ற கதைக் கூறப்படுகின்றது.

ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் எட்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம். சரி நாம் வேலை செய்கின்றோம், 8 மணி நேரத்தில் 2 கிலோ தான் கொழுந்து பறித்தால் என்ன செய்ய முடியும்? ஆக தொழிலாளர்கள் ஒன்றுமையாக இருக்க வேண்டும்.

வன்முறைகள் வேண்டாம். முறையாக போராடுவோம். தொழிற்சங்கங்கள், கொழும்பில் ஒன்று கூடி பேச்சு நடத்தினோம். இது விடயத்தில் இணைந்து செயற்பட தீர்மானிக்கப்பட்டது. காங்கிரஸ் என்றும் தொழிலாளர் பக்கம் நிற்கும். “ - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-06-15 06:26:02
news-image

பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது !

2024-06-14 18:08:19
news-image

நீர்கொழும்பு கடலில் மூழ்கி இரு மாணவர்கள்...

2024-06-14 22:16:30
news-image

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் ;...

2024-06-14 22:31:10
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்...

2024-06-14 20:17:48
news-image

நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு ...

2024-06-14 20:10:57
news-image

தேர்தல் விவகாரங்களில் தலையிடவில்லை - சர்வதேச...

2024-06-14 17:33:56
news-image

இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்சியங்களை சேகரிக்கும்...

2024-06-14 19:43:25
news-image

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை...

2024-06-14 19:30:54
news-image

வடக்கின் 3 மாவட்டங்களில் 6 இடங்களில்...

2024-06-14 19:26:50
news-image

நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் குறைவடைந்துள்ளன ;...

2024-06-14 19:18:57
news-image

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும்...

2024-06-14 18:28:24