கடலுக்குச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 5

19 Sep, 2022 | 10:57 AM
image

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து (17) ஆம் திகதி இயந்திர படகில் மூன்று மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். 

இவ்வாறு கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் நேற்று (18) கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக அவருடன் சென்ற இரண்டு மீனவர்களும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

கடலுக்குச் சென்று மரணமடைந்த நபர் மாவடிச்சேனை அஹமட் ஹிராஸ் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இப்றா லெப்பை கலீல் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13