கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் இளம் குடுமபஸ்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவர் 11 மாதங்களின் பின்னர் பொலிசாரால் இன்று (18-09-2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இரவு இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்
இந்நிலையில் நவம்பர் மாதம் 17ஆம் திகதி சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன் நிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 11மாதங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை இன்றைய தினம் விசேட குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன் குறித்த சந்தேக நபரை நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM