வவுனியாவில் ஆசிரியரை தாக்க முயற்சி : மாணவர் காயம்

Published By: T Yuwaraj

18 Sep, 2022 | 05:46 PM
image

K.B.சதீஸ் 

வவுனியாவில் நேற்று இரவு தனியார் கல்வி நிலையத்தில் ஆசிரியர் ஒருவரைத் தாக்க முற்பட்ட மாணவர்களினால் ஆசிரியருக்கு அருகில் நின்ற மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தலையில் காயமடைந்த குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் அங்கு நின்ற மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டனர். இதை அங்கு நின்ற ஆசிரியர் அவதானித்துள்ளதுடன் தனது கல்வி நிலையத்துடன் தொடர்பு அற்ற மாணவர்களை அங்கிருந்து செல்லுமாறும் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரித்த போது திடீரென்று தலைக்கவசத்துடன் நின்ற மாணவர் ஒருவர் குறித்த ஆசிரியரை இலக்கு வைத்து தாக்க முற்பட்டபோது அருகில் நின்ற மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த தனியார் கல்வி நிலையத்தில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட19வயது மாணவர் காயமடைந்து வைத்தியசாலை விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து காயமடைந்த மாணவனின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆற்றை கடக்கச் சென்ற சகோதரனும் சகோதரியும்...

2023-03-24 15:45:56
news-image

புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக சட்டத்தரணிகள்...

2023-03-24 15:27:08
news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20