மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்க முயற்­சிக்­காது சர்­வ­தேச நாடு­களின் மனங்­களை வென்றெடுக்கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. ஜெனிவா அறிக்­கையை ஏற்­றுக்­கொண்ட போதே நாம் குற்­ற­வா­ளிகள் என்­பதை ஏற்­றுக்­கொண்­டு­விட்டோம். ஆகவே பொறுப்­பு­கூ­றலில் அர­சாங்கம் அக்­கறை காட்­ட­வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.

யுத்­த­குற்ற விசா­ர­ணை­களை சரி­யாக மேற்­கொண்டு உண்­மை­களை கண்­ட­றிந்தால் சர்­வ­தேச நாடுகள் எம்மை ஆத­ரிக்கும் நிலைமை ஏற்­ப­டலாம் எனவும் அந்த முன்னணி குறிப்­பிட்டது.

போர்க்­குற்றம் உள்­ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அர­சாங்கம் பொறுப்­பு­கூறல் தொடர்­பி­லான பொறி­மு­றையில் அர­சாங்கம் சரி­யாக நடந்­து­கொள்­ளாத நிலையில் ஜெனி­வாவில் எதிர்­வரும் ஜூன் மாதம் நடை­பெ­ற­வுள்ள மனித உரி­மைகள் அமர்வில் மீண்டும் இலங்கை தொடர்பில் ஆராயும் நிகழ்ச்சி நிரல் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை வின­விய போதே கட்­சியின் ஊட­கப்­பேச்­சாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்கை தொடர்பில் சர்­வ­தேசம் முன்­வைத்­து­வரும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­னணி தெளி­வான நிலைப்பாட்டில் உள்­ளது. அதா­வது எம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் எவையும் நியா­யத்தின் அடிப்­ப­டையில் முன்­வைக்­கப்­பட்ட ஒன்­றல்ல. மாறாக மேற்கு நாடு­களின் தேவைக்­கா­கவும், அவர்­களின் ஆதிக்­கத்தை பிர­யோ­கிக்கும் வகை­யி­லுமே இந்த குற்­ற­சாட்­டுகள் அனைத்தும் முன்­வைக்­கப்­பட்­டன. அதன் கார­ணத்­தினால் தான் கடந்த காலத்தில் இந்த குற்­றச்­சாட்­டு­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளாது புறக்­க­ணித்து வந்­தது.

எனினும் ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்கம் ஜெனிவா அறிக்­கையை ஏற்­றுக்­கொண்டபோதே நாம் குற்­றங்­களை ஏற்­றுக்­கொண்­ட­தாக அமைந்­து­விட்­டது. அவ்­வா­றான நிலையில் இப்­போது நாம் அவர்­களின் சூழ்ச்­சியில் விழுந்­து­விட்டோம். ஆகவே இப்­போது அர­சாங்கம் சர்­வ­தேச அறிக்­கை­களை கவ­னத்தில் கொள்­ளாது உண்­மை­களை கண்­ட­றியும் பொறி­மு­றையை சரி­யாக கையாள வேண்டும்.

அதேபோல் நாம் சர்­வ­தேச தரப்பை திருப்­திப்­ப­டுத்தும் வேலையை செய்­யாது மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்கும் வேலை­யி­னையே மேற்­கொள்ள வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­களின் நியா­யத்தை வென்று­கொ­டுத்து அதே­வேளை குற்­ற­வா­ளி­களை கண்­ட­றியும் வேலை­யினை அர­சாங்கம் உள்­ளக பொறி­மு­றை­களின் மூல­மாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். கடந்த காலத்­தைப்போல் மக்­க­ளையும் ஏமாற்றி சர்­வ­தேச நாடு­க­ளையும் ஏமாற்றும் வேலை­யினை செய்­யாது நாட்டை காப்­பாற்றி ஜன­நா­யக்­கதை பலப்­ப­டுத்தும் வேலையை மட்­டுமே மேற்­கொள்ள வேண்டும்.

ஐக்­கிய நாடு­களின் அமைப்பில் வெறு­மனே அமெ­ரிக்கா மட்­டுமே அங்கம் வகிக்கவில்லை. உலகின் பல்வேறு நாடுகள் இந்த கட்டமைப்பில் உள்ளன. ஆகவே இலங்கை மேற்கொள்ளும் செயற்பாட்டில் ஏனைய நாடுகள் இலங்கையை ஆதரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆகவே அரசாங்கமே நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.