தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த சந்திப் கிஷன்

By Digital Desk 5

18 Sep, 2022 | 02:05 PM
image

'திருச்சிற்றம்பலம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் 'கேப்டன் மில்லர்' எனும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் சந்திப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

'ராக்கி', 'சாணி காயிதம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.

இதில் நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

இவர்களுடன் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான இளம் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இது தொடர்பாக நடிகர் சந்திப் கிஷன் பேசுகையில்,'' கேப்டன் மில்லர் பட குழுவினர் எம்மைத் தொடர்பு கொண்ட போது, மறுப்பு தெரிவிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன். தனுசுடன் இணைந்து நடிப்பது என்பது மறக்க இயலாத விடயம். அவருடன் படப்பிடிப்பில் பங்குபற்றும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.'' என்றார்.

தனுஷ் இரண்டு வேடத்தில் நடிக்கவிருக்கும் 'கேப்டன் மில்லர்' படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இதனை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தியாகராஜன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றதாலும், அவரது நடிப்பில் தயாராகி வரும் 'நானே வருவேன்' மற்றும் 'வாத்தி' ஆகிய இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவிருப்பதாலும் , 'கேப்டன் மில்லர்' படத்தில் முதன்முதலாக தனுசும், சந்திப்பும் இணைந்திருப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்