(எம்.மனோசித்ரா)
பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக இலங்கை முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான புதிய சவுதி தூதுவராக நியமனம் பெற்றுள்ள காலித் பின் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி , பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்றுமுன்தினம் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே பிரதமர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சவுதியில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதே தனது பிரதான நோக்கமாகும் என்று தூதுவர் இதன் போது பிரதமரிடம் தெரிவித்தார். சவூதி அரேபியாவில் உள்ள முழுமையான பயிற்சி மற்றும் முழுமையற்ற பயிற்சி பெற்றுக் கொண்ட இலங்கை பணியாளர்களின் எண்ணிக்கையை குறுகிய காலத்தில் 180,000 இலிருந்து 400,000 ஆக உயர்த்த முடியும் என்று அவர் கூறினார்.
'நான் இலங்கையை நேசிக்கிறேன், உங்கள் நாட்டிற்கு என்னால் முடிந்த ஆதரவை வழங்குவேன்' என்று உறுதியளித்த தூதுவர் , தற்போதைய பொருளாதார பிரச்சினைகளில் இருந்து இலங்கை விரைவில் மீண்டு வரும் என சவூதி அரசாங்கம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
முதலீட்டுச் சபையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்த்தப்பட்ட விசா விதிமுறைகள் மற்றும் முதலீட்டு வசதித் திட்டங்கள் அதிகளவான சவூதி முதலீட்டாளர்களை இலங்கைக்குக் கொண்டு வர உதவும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன இதன் போது சுட்டிக்காட்டினார்.
வலுசக்தி, மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய சவுதி அரேபியாவுக்கு வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், சவுதி அபிவிருத்தி நிதியத்தின் புதிய உதவித் திட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
சுற்றுலா மேம்பாடு மற்றும் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சவுதி எயார்லைன்ஸ் திட்டங்கள் குறித்தும் இதன் போது இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM