இணையனுசரணை நாடுகளின் பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலைவகிக்கும் சாத்தியம்

Published By: Digital Desk 5

17 Sep, 2022 | 11:22 PM
image

(நா.தனுஜா)

ஜெனிவா சென்றுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அங்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்த்ரா மணி பாண்டேவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (12) ஜெனிவாவில் ஆரம்பமானதுடன், அன்றைய தினமே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதமும் நடைபெற்றது. அதனையடுத்து இரு தினங்களில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் தயாரித்திருக்கும் புதிய பிரேரணை வரைவு வெளியாகியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவா பயணமாகியிருப்பதுடன் அங்கு சில முக்கிய சந்திப்புக்களிலும் கலந்துகொண்டிருக்கின்றார்.

அதன் ஓரங்கமாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்த்ரா மணி பாண்டேவை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய பிரேரணை தொடர்பிலும் அவருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லையென இந்தியப்பிரதிநிதி மணி பாண்டே சுட்டிக்காட்டியிருந்தார். அவ்விடயம் இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையில் பின்னணியைத் தெளிவுபடுத்தும் பந்தியில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், அதனை செயற்பாடுகள் தொடர்பான பந்திக்கு மாற்றுமாறு சுமந்திரன் ஏற்கனவே இணையனுசரணை நாடுகளிடம் கோரிக்கைவிடுத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மணி பாண்டேவை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய பிரேரணையை ஆதரிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ள போதிலும், இவ்விடயத்தில் இந்தியா நடுநிலைவகிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08