நடிகை அஞ்சலி சிறிய இடைவெளிக்கு பிறகு கதையின் நாயகியாக நடிக்கும் புதிய வலைதளத் தொடருக்கு 'ஃபால்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கிறது.
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் தயாராகும் முதல் வலைத்தளத் தொடர் 'ஃபால்'. இந்த தொடரில் நடிகை அஞ்சலி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவருடன் எஸ் பி பி சரண், சந்தோஷ் பிரதாப், தலைவாசல் விஜய், சோனியா அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிஷன் சி செழியன் படத்தொகுப்பை கவனிக்க, அஜேஷ் இசையமைக்கிறார். இதனை பனிஜய் ஆசியா தயாரித்திருக்கிறார்.
வலைதள தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், '' வெர்டிஜ் என்ற பெயரில் கனடா நாட்டு வலைதளத் தொடரின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக் தான் ஃபால். திவ்யா என்ற இளம் பெண்ணிற்கு, அவர் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே நினைவில் இருக்கிறது. தான் யார்? என்பது குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறாள்.
ஆனால் யாரையும் எளிதில் நம்ப முடியாத சூழலில் இருப்பதால், தனக்கு என்ன நடந்தது? என்பதனை தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உண்மையை தேடத் தொடங்குகிறாள். மறந்து போன தன் நினைவுகளை முழுமையாக மீட்டெடுக்க முயல்கிறாள். இதனை பின்னணியாக வைத்து தான் இந்தத் தொடர் தயாராகி இருக்கிறது.'' என்றார்.
இந்தத் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது. வெளியிட்டு திகதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஃபால்' வலைதள தொடரின் ஃபர்ஸ்ட் லுக் கில் நடிகை அஞ்சலியின் தோற்றம் அர்த்தமுள்ளதாக இருப்பதாலும், நடிகை அஞ்சலி கதையின் நாயகியாக நடித்திருப்பதாலும் இந்தத் தொடருக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM