அதர்வாவை 'ஜூனியர் கேப்டன்' என புகழாரம் சூட்டிய மூத்த நடிகர்

By Digital Desk 5

17 Sep, 2022 | 12:03 PM
image

'' ட்ரிக்கர் படத்தின் எக்சன் காட்சிகளில் அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை நேரில் பார்த்தவுடன்  'ஜூனியர் கேப்டன்' என அவரை அழைக்கத் தோன்றுகிறது'' என நடிகர் சின்னி ஜெயந்த் நடிகர் அதர்வாவிற்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இயக்குநர் சாம் அண்டன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'டிரிக்கர்'. இதில் நடிகர் அதர்வா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சின்னி ஜெயந்த், அருண் பாண்டியன், முனீஸ்காந்த், அன்பு தாசன், அறந்தாங்கி நிஷா, அழகம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சுருதி நல்லப்பா மற்றும் பிரதீப் சக்கரவர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார்.

செப்டம்பர் 23ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் 'ட்ரிக்கர்' படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் அதர்வா, அருண்பாண்டியன், சின்னி ஜெயந்த், தயாரிப்பாளர்கள் ஸ்ருதி நல்லப்பா, பிரதீப் சக்கரவர்த்தி ஆகியோர் பங்கு பற்றினர்.

இதில் நடிகர் சின்னி ஜெயந்த் பேசுகையில், '' எம்முடைய 38 ஆண்டு திரையுலக அனுபவத்தில் நடிகர் முரளியுடன் இணைந்து 22 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.

முதன் முதலாக அவரது வாரிசான அதர்வாவுடன் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன். எக்சன் காட்சிகளில் நடிகர் அதர்வாவின் வேகமும், ஈடுபாடும் கண்டு வியந்தேன்.

திரையுலகில் எக்சன் காட்சிகளில் நடிப்பதில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய இருவர் மட்டுமே அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்குவார்கள்.

'ட்ரிக்கர்' படத்தில் இந்த இரு நடிகர்களைப் போல் அதர்வாவும் எக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறார். அதனால் அவரை இனி 'ஜூனியர் கேப்டன்' என அழைக்கலாம். படத்திலும் இவரது எக்சன் காட்சிகளை கண்டு ரசிகர்கள் கைதட்டி பாராட்டுவார்கள்.'' என்றார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' காவலர்களின் பணித்திறன் குறித்தும், அவர்களுடைய நேர்மை குறித்தும் அவதானிக்க, காவல்துறையில் ஒரு தனிப்பிரிவு செயலாற்றுகிறது.

அந்தப் பிரிவில் பணியாற்றும் காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார். இத்துடன் ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான ஆழமான உறவும் இந்த திரைக்கதையில் பிணைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் வெளியீட்டு...

2022-09-26 22:23:03
news-image

சன்னி லியோன் நடிக்கும் 'ஓ மை...

2022-09-26 21:28:05
news-image

பொன்னியின் செல்வன் ; முக்கிய கதாபாத்திரங்கள்...

2022-09-26 16:40:20
news-image

பண மோசடி வழக்கு ; நடிகை...

2022-09-26 14:59:02
news-image

வேதிகா நடிக்கும் 'மஹால்' பட தொடக்க...

2022-09-25 13:08:17
news-image

மனச்சோர்வுக்கு மருந்தாகும் 'நித்தம் ஒரு வானம்'

2022-09-24 13:59:10
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட புதிய பாடல்...

2022-09-24 12:40:53
news-image

குழலி - விமர்சனம்

2022-09-23 16:37:54
news-image

அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின்...

2022-09-23 16:02:32
news-image

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்'

2022-09-23 11:21:04
news-image

தனுஷின் 'வாத்தி' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

2022-09-21 11:54:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-09-18 14:05:47