யாழ்ப்பாணம், இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் இந்த அகழ்வுப் பணி இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை, முன்னதாக, இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 6 பேர் அகழ்வுப் பணிக்கு தயாராகிய நிலையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ளவர்களும் உள்ளடங்கியிருந்தனர் .
இந்த நிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இன்று முற்பகல் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM