முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்ட கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று(16) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தாம் செல்கின்ற ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே அமைச்சின் உயரதிகாரிகளுடன் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசித்து பொதுவானதொரு முடிவு எட்டப்படும் என தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுகந்த ககவத்த, பிரதி பணிப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி வில்வராஜா, கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் சி.ஷர்மி, கடற்றொழில் வள மாவட்ட உத்தியோகத்தர் றமேஸ் கண்ணா, மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சம்மேளன அங்கத்தவர்கள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், சமாசங்களின் அங்கத்தவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM