(இராஜதுரை ஹஷான்)
காலி முகத்திடல் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது ஆகவே மக்கள் போராட்டம் முடிவடைந்து விட்டது என எண்ணுவது தவறு. வெகுவிரைவில் மக்கள் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவில் தோற்றம் பெறும்.
அப்போராட்டம் பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் 15 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இளைஞர் யுவதிகளின் பங்குப்பற்றலுடன் ஆரம்பமான காலி முகத்திடல் போராட்டம் அரசியல்,சமூக கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் பொதுஜன பெரமுனவ தலைமையிலான அரசாங்கத்தின் ஜனாதிபதி,பிரதமர் உட்பட முழு அமைச்சரவையையும் பதவி விலகுமாறு ஜனநாயக ரீதியில் வலியுறுத்தினார்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஜனநாயக ரீதியில் பதவி விலகாத காரணத்தினால் இறுதியில் மக்கள் போராட்டத்தினால் அவர்கள் இருவரும் பதவி விலக நேரிட்டது.
போராட்டத்தின் ஊடாக நாட்டு மக்கள் விடு;த்த செய்தியை அரசியல் தரப்பினர் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை.
காலி முகத்திடல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததால் மக்கள் போராட்டம் இனி தோற்றம் பெறாது என அரசியல் தரப்பினர் கருதுவது முற்றிலும் தவறானது.கடந்த காலத்தை காட்டிலும் தற்போது நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.
நாட்டு மக்களின் அபிலாசைக்கு மதிப்பளிக்காமல் அரசாங்கம் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு அவதானம் செலுத்தியுள்ளதால் இன்னும் மூன்று நான்கு மாத காலத்திற்குள் மக்கள் போராட்டம் திட்டமிட்ட வகையில் பலமாக தீவிரமடையும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM