நினைவேந்தலில் முட்டி மோதுவோர் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் - சிவாஜிலிங்கம் கேள்வி

Published By: Vishnu

16 Sep, 2022 | 02:06 PM
image

( எம்.நியூட்டன்) 

தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினர்.

யாழ் ஊடக அமையத்தில்  நடாத்திய  ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே  இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நினைவேந்தல்களில் பொதுவாக அனைவரும் இணைந்து அஞ்சலி செலுத்த வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு தியாக தீபம் தீலீபனின் நினைவேந்தலுக்கு காகம் கூட பறக்கவில்லை.

அப்போது நான் கோண்டாவில் பகுதியில் நினைவேந்தலை மேற்கொண்டதால் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் செயற்பாட்டில் இல்லை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலில் இவ்வாறான நினைவேந்தலை முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைவரும் ஏட்டிக்கு போட்டியாக இல்லாமல் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக அனுஷ்டிக்க வேண்டும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23