இலங்கையின் நெருக்கடி போரினால் சிதைந்த தமிழர்களின் வாழ்க்கையை மேலும் நெருக்கடியானதாக்குகின்றது

By Rajeeban

16 Sep, 2022 | 12:19 PM
image

இலங்கையில் முல்லைத்தீவில்   கொழுத்தும் வெயிலில் 44 வயது விவசாயி தான் வாடகைக்கு எடுத்த வேர்க்கடலை நிலத்தில் பயிர்செய்வதற்காக  மண்வெட்டியை நிலத்தை நோக்கி கொத்துகின்றார்,பல அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை சாத்தியமற்றதாக்கியுள்ள பணவீக்கத்திற்கு எதிராக அவர் போராடுகின்றார்.

நாளாந்த கூலித்தொழிலாளியை விட எனக்கு அதிக நெருக்கடிகள் என்கின்றார் சிகரம் சூசைமுத்து- இவர் 2009 இல் விமானதாக்குதலில் இரண்டு கால்களையும் இழந்தவர் - அவரின் ஒரு கையிலும் காயம் உள்ளது.

இதன் காரணமாக அவர் தனது உள்ளங்கைகளை பயன்படுத்தியே நடமாடுகின்றார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற ஆயுதக்குழுவிற்கும் இடையிலான மோதலின் போது இது இடம்பெற்றது.

இறுதி யுத்தத்தின்போது அனேகமான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட சூசைமுத்துவின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இந்த பொருளாதார நெருக்கடி இரண்டாவது அடியாகும்

வாழ்வதற்காக அனேக மக்கள் நாளாந்த தொழிலாளர்களாக தொழில்புரிகின்றனர் ஆனால் சூசைமுத்துவினால் அவ்வாறு வேலை பார்க்க முடியாது.

நான் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்க போனால் எனக்கு எவரும் வேலை தரமாட்டார்கள் மேலும் இந்த நிலையில் நான் வெளியே சென்று வேலை பார்ப்பது சாத்தியமில்லை இல்லையா என அவர் கேள்வி எழுப்புகின்றார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் அவர் மீனவராக தொழில்புரிந்தார், இலங்கை தசாப்தகாலத்தில் எதிர்கொண்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடி இது - இந்த நெருக்கடி எரிபொருள் விநியோகத்தை பாதித்தது,சூசைமுத்து மீன்பிடித்தொழிலை கைவிட்டுவிட்டு  வேர்க்கடலை பயிர்ச்செய்கைக்கு செல்லும் நிலையை ஏற்படுத்தியது.

நாங்கள் எங்கள் பசியை கட்டுப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டாலும் பிள்ளைகளிடம் சாப்பிடுவதற்கு இவ்வளவு தான் உள்ளது என சொல்லமுடியுமா என அவர் கேள்வி எழுப்புகின்றார்.

ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனம் 6.2 மில்லியன் இலங்கையர்கள் உணவுப்பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளனர் என மதிப்பிட்டுள்ளது- இதில் சூசைமுத்துவின் குடும்பத்தினரும் உள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோன பெருந்தொற்றும்  பொருளாதாரத்தை பிழையாக கையாண்டமையும் காரணம் , கொரோனா பெருந்தொற்று வெளிநாட்டு வருவாயை பெற்றுத்தருவதில் முக்கியமானதாக காணப்பட்ட சுற்றுலாத்துறையை அழித்தது.

பல மாதங்களாக 22 மில்லியன் மக்கள் மின்வெட்டு- வேகமாக அதிகரிக்கும் பணவீக்கம்- வீழ்ச்சியடையும் ரூபாய் -உணவு எரிபொருள் இறக்குமதிக்கான பணத்தை செலுத்துவதை கடினமாக்கிய டொலர் பற்றாக்குறை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு இலங்கையில் வறுiமையான மாவட்டங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது,மாவட்டத்தின் 58 வீதமான மக்கள் வறுமையில் உள்ளனர் என்பதை சேவ் த சில்ரனின் மதிப்பீடு கடந்த மாதம் வெளிப்படுத்தியது.நெருக்கடி காரணமாக தங்கள் வருமானத்தை இழந்துவிட்டோம் என அதிகளவானவர்கள் தெரிவித்த மாவட்டமாக முல்லைத்தீவு காணப்படுகின்றது.

தேசிய அளவில் 31 வீதமான பெரியவர்கள் சூசைமுத்து தெரிவித்ததையே அவர்களும் தெரிவித்தனர்-தங்கள் குழந்தைகளிற்கு உணவு வழங்குவதற்காக தங்கள் உணவை குறைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அவர் மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என தெரிவித்தார் பிரதேசத்தின் மக்களிற்கு உதவும் மனிதாபிமான அமைப்பான டியர்ஸ் ஒவ் வன்னியின் அமைப்பாளர் சோமா சோமநாதன் 

யுத்தத்தின் பின்னர் இருந்த நிலைக்கு அவர்கள் மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர் என சிட்னியை தளமாக கொண்ட அவர் குறிப்பிட்டார்.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய 4 மில்லியன் குடும்பங்களை மையமாக கொண்ட நலன்புரி திட்டமொன்றை இலங்கை முன்னெடுக்கின்றது என்கின்றார்சமூக வலுப்படுத்தல் அமைச்சி;ன் செயலாளர் நெய்ல் ஹப்புகினி.மேலும் ஆறு இலட்ச்சம் மக்களிற்கு நேரடியாக நிதி உதவி செய்யும் திட்டமும் உள்ளது என்கின்றார் அவர்.

உதவி மிகவும் தேவைப்படுபவர்கள் அடையாளம் காணப்பட்டு உதவி வழங்கப்படும் என தெரிவிக்கும் அவர் இந்த வருடம் 32 மில்லியன் குடும்பங்களிற்கு வழங்கப்பட்டது என்கின்றார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ள 200 மில்லியன் டொலர் உணவு நெருக்கடியை போக்குவதற்கு உதவப்போகின்றது அதேவேளை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் உலக வங்கி போன்றவற்றின் உதவியை நாடியுள்ளது.

முல்லைத்தீவில் சூசை முத்து அன்றைய நாள் முடிவில் மண்வெட்டியை கீழே வைத்தார், தனது முயற்சியின் பலனை அவர் அறிவதற்கு இரண்டு மாதங்களாகும்.

விலைகள் குறைந்தால் நாங்கள் இவ்வளவு கஸ்டப்படமாட்டோம்,என்கின்றார் அவர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right