நாடளாவிய ரீதியில் வார இறுதி நாட்களில்  தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு

Published By: Digital Desk 4

15 Sep, 2022 | 10:42 PM
image

 (எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றை ஒழிக்கும் மூன்றாம் மற்றும் நான்காம் தடுப்பூசிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தினை எதிர்வரும் வாரங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய நாளைமறுதினம் சனிக்கிழமை, எதிர்வரும் 24 ஆம் திகதி , ஒக்டோபர் முதலாம் திகதி , 8 ஆம் திகதி ஆகிய வார இறுதிநாட்களில் இந்த வேலைத்திட்டத்தினை பிரதேச சுகாதார பிரிவு மற்றும் வைத்தியசாலைகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தில் 20 வயது மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக முதலாம், இரண்டாம் கட்ட தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமையை, 12 - 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்திய பின்னர் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும்.

ஒவ்வொரு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் 3 இடங்களில் இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். ஏனைய கிளினிக்குகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசியை வழங்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37