உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : சதி, குண்டு தயாரிப்பு தொடர்பில் 6 பேருக்கு எதிராக குற்றப் பத்திரம்

Published By: Digital Desk 4

15 Sep, 2022 | 10:41 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போது பயனப்டுத்தப்பட்டதாக கூறப்படும்  21 குண்டுகளை தயாரித்தமை, சதி செய்தமை தொடர்பில் 6 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.  அதன்படி அந்த குற்றப் பகிர்வுப் பத்திரம்,  இன்று ( 15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க முன்னிலையில் பிரதிவாதிகளுக்கு கையளிக்கப்பட்டது.

மொஹம்மட் சிபான் சத்தார், செய்யத் அபூ மொஹம்மட் அஸ்ரப், மொஹம்மட் இஷாக் மொஹம்மட் நிலாப்தீன் அல்லது அர்ஷாத்,  குனசீலன் ரவீந்ரன் அல்லது  மொஹம்மட் இஷாக்,  ஷெய்க் மொஹம்மட் பரீக்  மொஹம்மட் பெளசி,  மொஹம்மட் மொயினுத்தீன் மூசா அல்லது அப்துல்லாஹ் ஆகிய 6  பிரதிவாதிகளுக்கே குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

 கொழும்பு சினமன்  கிராண்ட் ஹோட்டலின்  தப்ரபேன் உணவகத்தில்  தற்கொலை குண்டுதாரியாக குண்டை வெடிக்கச் செய்த,   மொஹம்மட்  இப்ரஹீம் இன்ஷாப்  அஹமட்டின்  ஆலோசனைக்கு அமைய கடந்த 2018 ஜனவரி  முதலாம் திகதிக்கும் மார்ச் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட  காலப்பகுதியில்  குண்டு தயாரித்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் , பிரதிவாதிகளுக்கு எதிராக  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  குற்றச்சாட்டு  சட்ட மா அதிபரால் முன் வைக்கப்பட்டுள்ளது.

 நேற்று குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர், முதலாவது பிரதிவாதிக்காக சட்டத்தரணி மொஹம்மட் பஸீர் ஆஜரான நிலையில்  ஏனைய ஐவர் சார்பிலும் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் ஆஜரானார்.

  பிரதிவாதிகள் சுமார் 3 வருடங்களாக விளக்கமறியலில் இருக்கும் நிலையில், பிணை தொடர்பில் இன்று ( நேற்று) வாதங்களை முன் வைக்காத போதும் அடுத்த தவணை பிணை வாதங்களை முன் வைக்க எதிர்ப்பார்ப்பதாக அவர்கள்  சட்டத்தரள்கள் மன்றின் அவதானத்துக்கு கொண்டு வந்தனர்.

 இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிபதி நவரட்ன மாரசிங்க பிரதிவாதிகளை  அடுத்த மாதம் 24 ஆம் திகதிவரை விலக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17