( எம்.எப்.எம்.பஸீர்)
சீதுவை பகுதியின் விகாரை ஒன்றிலிருந்து, விகாராதிபதி தேரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே விகாரையில் தங்கியிருந்த 19 வயதான பிக்கு ஒருவரே, டுபாய் நோக்கி செல்ல முற்பட்ட போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 649 எனும் விமானத்தில் டுபாய் நோக்கி செல்ல, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த போது இன்று ( 15) அதிகாலை 1.00 மணியளவில் ஏக்கல சுதந்த ஸ்ரீ எனும் குறித்த இளம் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதுவ பொலிஸார் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று அறிவிறுத்தியிருந்த நிலையில், சந்தேக நபர் விமான நிலையம் வந்த போது அவரை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்து சீதுவை பொலிசாரிடம் இன்று முற்பகல் ஒப்படைத்தனர்.
சீதுவை - வேத்தேவ, ரந்தொலுவ ஸ்ரீ நத்தாராம விகாரையின் விகாராதிபதி நெடகமுவே மஹானாம தேரரே ( 50) நேற்று ( 14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விகாரையின் விகாராதிபதி தங்குமிடத்தில் கட்டில் ஒன்றின் மேல் முகம் துணியால் கட்டப்பட்டு வாய்க்குள் துணி தினிக்கப்பட்டிருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் கூறினர். இதன்போது போர்வை ஒன்றால் சடலம் போர்த்தப்பட்டிருந்துள்ளது.
குறித்த தேரர் கழுத்து நெறித்து கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விகாரையிலிருந்து துர் நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரையில், 18 வயதான இளம் பிக்கு ஒருவரும் தங்கியிருந்துள்ளதுடன், அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், பொலிஸாரின் கவனம் குறித்த பிக்கு மீது திரும்பிய நிலையில் விசாரணைகள் தீவிரப்ப்டுத்தப்பட்டிருந்தன.
நேற்று இரவு எட்டு மணி அளவில் சம்பவ இடத்துகு நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் குமார நாயக்க சென்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையில் சீதுவ பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், விகாரையில் இருந்த டிபண்டர் ரக வாகனம் ஒன்றும் வெகன் ஆர் கார் ஒன்றும் காணாமல் போயுள்ளமை தெரியவந்த நிலையில், அதன் ஊடாகவும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே சந்தேகத்தின் பேரில் இளம் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் பிரகாரம், விகாரையிலிருந்த டிபண்டர் வண்டி மற்றும் வெகன் ஆர் கார் ஆகியவற்றின் புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதற்காக விகாராதிபதி கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 12 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் இந்த கொலை நடந்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னரும் சந்தேக நபரான இளம் பிக்கு விகாரையில் தங்கியிருந்து இரு வாகனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் இரு வாகனங்களையும் 2 கோடி ரூபாவுக்கு விற்றுள்ள பிக்கு, விகாரையிலிருந்து நேற்று சென்றுள்ளார். அதன் பின்னரேயே விகாரையில் ஒருவரும் இல்லாமை, விகாராதிபதியின் தங்குமிடத்திலிருந்து வந்த துர் நாற்றம் ஆகியவையால் சந்தேகமடைந்த மக்கள் பொலிசாருக்கு தகவளித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் சீதுவ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட பிக்குவை நீர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபப்டுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM