ஆரோக்கிய துவாய்களின் ' விலை உயர்வு ; பாடசாலை மாணவிகளின் வரவில் வீழ்ச்சி -,ஆசிரியைகள், அரச, தனியார் ஊழியர்களுக்கும் சிக்கல்

Published By: Digital Desk 4

15 Sep, 2022 | 05:04 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 ' ஆரோக்கிய துவாய்களின் ' அதிக விலையேற்றம் காரணமாக , பாடசாலை மாணவியர், பல்கலைக்கழக மாணவியர், ஆசிரியைகள்,  அரச தனியார் துறை ஊழியர்கள் மாதவிடாய் காலப்பகுதியில் வீட்டிலிருந்து வெளியேறாமல், வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு தூண்டப்பட்டு வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 ஆசிரியர் தொழிற் சங்கத்துடன் இணைந்து கொழும்பில் விஷேட ஊடக சந்திப்பினை நடாத்திய மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக்   கூட்டமைப்பின் தலைவர்  வைத்தியர் சமல் சஞ்சீவ இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.

' வயதுக்கு வந்த மாணவிகள், மாதவிடாய் காலப்பகுதியில்  பாடசாலைக்கு செல்வதை தவிர்ப்பது அவதானிக்கப்பட்டு வருகின்றது.  விஷேடமாக கிராம புற மாணவியர்கள் இவ்வாறு பாடசாலை செல்வதை தவிர்ப்பதில் அதிகரிப்பை காண முடிகிறது.  சுகாதார துறைக்கு பெண் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இருக்கும் சூழலில் இந்த நிலைமை கவலைக்குரியதாகும்.

ஆரோக்கிய துவாய்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில்,  மாணவிகள் மட்டுமன்றி ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவிகள்,  அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும் பெண் ஊழியர்கள் என அனைவரும் மாதவிடாய் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு உத்தேசிக்கும் வீதம் அதிகரித்துள்ளது.' என வைத்தியர்களின் தொழிற்சங்கக்   கூட்டமைப்பின் தலைவர்  வைத்தியர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலர் ஜோசப் ஸ்டாலின், தற்போது நிலவும் பொருளாதார நிலைமையில், பாடசாலைகளில்  காலை கூட்டங்களின் போது மயக்கமுற்று விழும்  மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58