பிரச்­சி­னைக்­கு­ரிய திரைப்­ப­டங்கள்

Published By: Robert

17 Nov, 2016 | 10:38 AM
image

யாழ்ப்­பாண சர்­வ­தேச திரைப்­பட விழாவில் இரண்டு சிங்­களப் படங்கள் மட்­டுமே காண்­பிக்­கப்­பட்­டன. அவை இரண்டும் இன்னும் திரைக்கு வராத முழு­நீளத் திரைப்­ப­டங்­க­ளாகும்.

ஒரு சிங்­களப் படத்தின் பெயர் ‘28’ என்­ப­தாகும். பிர­சன்ன ஜெயக்­கொடி என்ற இளைஞர் எழுதி இயக்­கி­ய­படம். இத்­தி­ரைப்­படம் பல்­வேறு நாடு­களில் நடை­பெற்ற திரைப்­பட விழாக்­களில் திரை­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது. 

ஆசி­யாவின் சிறந்த பட­மென நெட்பக் திரைப்­பட விழாவில் விருது பெற்­றது. 

கற்­ப­ழிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட பெண் ஒரு­வரின் சட­லத்தை மூவர் பழைய வேன்­ ஒன்றில் ஏற்றிச் செல்­லு­கின்­றனர். ஒரு இளைஞர், அவ­ரது நண்பர் ஒருவர், வேன் சாரதி ஆகிய மூவ­ருமே ஏற்றிச் செல்­கின்­றனர். இறந்த அந்தப் பெண் தன்னை விட்டுப் பிரிந்து வாழ்ந்த தனது மனைவி என்­பதை இளைஞன் இறு­தியில் கண்­டு­கொள்­கிறான்.

இதுதான் இப்­ப­டத்தின் கதைச்­சு­ருக்கம். இறந்த பெண்ணின் சட­லமே கதை சொல்­வ­தா­கவே படம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. வைத்தியசாலையில் சட­லங்கள் வைக்­கப்­படும் சவ­ அ­றையில் அப்பெண் நிற்­ப­தாக காண்­பிக்­கப்­ப­டு­கி­றது. பின்பு பிரேதப் பெட்­டிக்குள் இருந்தும் உரை­யா­டு­கி­றது. ‘28’ சிங்­களத் திரைப்­படம் காண்­பிக்­கப்­பட்டு முடிந்­ததும் படத்தின் இயக்­குநர் பிர­சன்ன ஜெய­கொ­டியும் தயா­ரிப்­பா­ளரும் மேடையில் தோன்றி பார்­வை­யா­ளர்களின் கேள்­வி­க­ளுக்கு பதில் அளித்­தனர். மொழி­பெ­யர்ப்­பா­ள­ராக பர­சு­ராமன் நிரஞ்சன் கலந்து கொண்டார்.

இந்தப் படத்­துக்கு ஏன் ‘28’ என்று பெயர் வைத்­தீர்கள்?

என்று ஒரு பார்­வை­யாளர் கேட்டார்.  பெண் ஒருத்­தியின் மாத­விடாய் சுற்­றுக்­காலம் 28 நாட்­க­ளாகும். இந்த மாதச்­சுற்றின் பிர­கா­ரமே பெண்­க­ளுக்கு பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்படுகின்­றன. அத­னால்தான் ‘28’ என்று பெயர் வைத்தேன் என விளக்கம் கூறினார் இயக்­குநர். 

அடுத்த சிங்­களப் படத்தின் பெயர்தான் ‘சுலங்க கினி அறன்’ (காற்று தீப்­பி­டித்து விட்­டது) விமுக்தி ஜெய­சுந்­தர என்ற இளைஞர் பிரதி எழுதி இயக்கித் தயா­ரித்த படம். இத் திரைப்­படம் டோக்­கியோ திரைப்­பட விழாவில் விரு­து­பெற்­றது. சிங்­கப்பூர் திரைப்­பட விழா­விலும் பரிசு பெற்­றது.

கொழும்­பி­லுள்ள சிறு­நீ­ரக கடத்­தல்­கார வைத்தியர் ஒரு­வரின் கதைதான் படத்தின் கரு. கொடி­ய­வர்­களின் உத­வி­யுடன் அப்­பா­வி­களின் உட­லங்­கங்­களை பிரித்­தெ­டுத்து மற்­ற­வர்­க­ளுக்கு பொருத்­து­வது தான் வைத்தியரின் தொழில்.

மனம் பேதமை பிடித்து அலையும் அந்த வைத்தியர் இறு­தியில் தற்­கொலை செய்­கிறார். வைத்தியரின் ஆவி அப்­பி­ர­தே­சத்தில் திரி­வ­தாக காட்­டப்­ப­டு­கி­றது.  அந்தக் கிரா­மத்தில் சில இளை­ஞர்கள் சீட்டு விளை­யாடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அப்­பொ­ழுது தொலைவில் வைத்தியரின் ஆவி போடும் அல­ற­லைக்­கேட்டு இளை­ஞர்கள் பயந்து விடு­கி­றார்கள்.

இது போக இன்­னு­மொரு காட்சி. ஒரு பெண் வேலி அருகே நின்று உடை­களை காய­வைத்துக் கொண்­டி­ருக்­கிறான். அவ­ளது பார்வை கெம­ராவை நோக்கித் திரும்­பு­கி­றது. திடீர் என்று மயக்கம் போட்டு விழுந்து விடு­கிறாள்.

அந்தப் பெண்­ண­ருகே ஒரு நாய் நிற்­கி­றது. அது கெம­ராவை நோக்­கி­ய­வாறே குரைக்­கி­றது.

இவை­யெல்லாம் வைத்தியரின் ஆவியைக் கண்டே அப்­படிச் செய்­கின்­றன என்று இயக்­குநர் எமக்கு உணர்த்­து­கிறார். வைத்தியர் செய்யும் வேறு அட்­டூ­ழி­யங்­களும் காண்­பிக்­கப்­ப­டு­கின்­றன. பெண்­ணுடன் குதத்­தின்­மூலம் புண­ருதல், மயக்­க­மான பெண்­ணுடன் புண­ருதல் போன்ற காட்­சி­களும் இடம்­பெ­று­கின்­றன.

இந்த திரைப்­பட விழாவில் எந்த மொழி­தி­ரைப்­ப­டங்­க­ளிலும் இடம்­பெ­றாத காட்­சி­க­ளாக அவை அமை­ந்தன. பார்­வை­யா­ளர்­களின் கடு­மை­யான விமர்­ச­னத்­துக்கு இப்படம் உள்­ளானது. யாழ்ப்­பா­ணத்தில் இப்­ப­டி­யான படம் காண்­பிக்­கக்­கூ­டாது என ஒரு விமர்­சகர் கூறி­யதை என்னால் அவ­தா­னிக்க முடிந்­தது. இன்னும் பல பார்­வை­யா­ளர்­களும் இவ்­வா­றான கருத்­துக்­க­ளையே வெளி­யிட்­டனர்.  படம் முடிந்த பின் இயக்­குநர் விமுக்தி ஜெய­சுந்­த­ரவும் நிர்­வா­ண­மாக நடித்த நடிகை சுரங்கா ரண­வக்­கவும் மேடையில் தோன்­றினர்.

'படத்தின் இறு­திக்­கட்­டத்தில் ஒரு பெண் எதையோ கண்டு மயங்கி விழு­கிறாள். நாய் குரைக்கிறது. பேய் போன்ற உருவங்கள் நாய் போன்ற மிருகங்களின் கண்களுக்கு தெரியும் என்று சொல்லப்படுகிறது. பேய் தோன்றுவதாக காட்சியில் சித்தரித்திருக்கின்றார்கள். அது சரியா?' என பார்வையாளர் ஒருவர் கேள்வி கேட்டார். 

'ஆம் அப்படியான ஒரு கருத்து பார்வையாளர்கள் மனதில் தோன்ற வேண்டும் என்றே அப்படியான காட்சியை அமைத்தேன்' என இயக்குநர் பதில் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35