(எம்.மனோசித்ரா)
பொருளாதார குற்றங்களிலிருந்து மீள்வதற்கு, நாட்டின் சொத்துக்களை கொள்ளையிட்டு பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுயாதீனமாக்கப்பட வேண்டும் என்பதோடு, இவை தொடர்பில் வழக்கு தொடர்வதற்கு சுயாதீன அலுவலகமொன்றும் நிறுவப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தம் இடம்பெற்ற போது பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டை வழங்குவதற்காக இழப்பீட்டு அலுவலகம் , காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக அது தொடர்பான அலுவலகமும் நியமிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர யுத்த காலத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதே போன்று இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக நல்லிணக்க செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் இவை அனைத்தும் காலப்போக்கில் கைவிடப்பட்டமையின் காரணமாகவே ஜெனீவாவில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது.
எனவே மனித உரிமை மீறல்களிலிருந்து நாடு விலக வேண்டும். இது இவ்வாறிருக்க தற்போது ஜெனீவாவில் பொருளாதார குற்றங்களால் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார குற்றங்களிலிருந்து மீள்வதற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுயாதீனமாக்கப்பட வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதைப் போன்று சொத்து மதிப்பு வெளியிடலை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவை மாத்திரமின்றி உள்நாட்டில் சொத்துக்களை மோசடி செய்து, அவற்றை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மறைத்து வைத்திருப்பவர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பில் புலம்பெயர் இலங்கையர்கள் ஆராய்கின்றனர்.
ஆனால் நாட்டு ஜனாதிபதி மௌனம் காக்கின்றார். திருடர்களைப் பாதுகாத்துக் கொண்டு திருட்டை நிறுத்த முடியாது. ஆனால் ஜனாதிபதி இதனையே தற்போது செய்து கொண்டிருக்கின்றார்.
வெளிநாடுகளில் சொத்துக்களை மறைத்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குரிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதே போன்று இவை தொடர்பில் வழக்கு தொடர்வதற்கு சுயாதீன அலுவலகமொன்றும் அமைக்கப்பட வேண்டும். தற்போது இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பரிந்துரைப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் காணப்படுகிறது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது அரசாங்கத்திற்கு சார்பாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
வழக்குகளைத் தொடர்வதற்கு பதிலாக, வழக்குகளைத் தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. பொருளாதாரக் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனில் , அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM