தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மல்லாவியில் அனுஷ்டிப்பு

Published By: Vishnu

15 Sep, 2022 | 05:04 PM
image

சண்முகம் தவசீலன்

தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மல்லாவியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

பாரத தேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து  தன் வாழ்வை தமிழரின் விடுதலைக்காக ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த முதலாவது தினம் இன்றாகும்.

தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் இடம்பெறுகிறது.

அந்தவகையில் தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மல்லாவியில் சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வ ஜன நீதி அமைப்பும் இணைந்து  10.09.2022 அன்று காங்கேசன்துறையில் ஆரம்பித்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி நகரை வந்தடைந்த நிலையில் அங்கு தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்ரிக்கப்பட்டது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

33 ரயில் சேவைகள் இரத்து 

2024-11-14 13:55:28
news-image

காலி சிறைச்சாலையில் கைதி தப்பியோட்டம்!

2024-11-14 13:49:39
news-image

குளவி கொட்டுக்கு இலக்காகி 17 முன்பள்ளி...

2024-11-14 13:57:23
news-image

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 ...

2024-11-14 13:35:09
news-image

அநுராதபுரத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர...

2024-11-14 13:28:31
news-image

கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

2024-11-14 13:31:43
news-image

பாராளுமன்றத் தேர்தல் 2024 : நண்பகல்...

2024-11-14 13:26:05
news-image

மன்னாரில் 6 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள்...

2024-11-14 13:05:52
news-image

யாழ்ப்பாணத்தில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 13:08:46
news-image

வவுனியா நகர் எங்கும் வீசப்பட்டுள்ள கட்சி...

2024-11-14 12:46:59
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-14 12:47:24
news-image

திருகோணமலையில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 14:06:33