கார் விபத்தில் சிக்கிய உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

Published By: Digital Desk 3

15 Sep, 2022 | 02:04 PM
image

உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியுள்ளார் என அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

உக்ரேன் நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

போரில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களை உக்ரேன் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. 

இதுபற்றி அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் செய்தி தொடர்பாளர் செர்ஹை நிகிபோரோவ் தனது பேஸ்புக் பதிவில், அதிபரின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது என தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து ஜெலன்ஸ்கியுடன் சென்ற வைத்தியர்கள் உடனடியாக ஜெலன்ஸ்கிக்கு பரிசோதனை செய்தனர். அவருக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளது.

அவரது வாகன ஓட்டுனருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன. 

இதன்பின்னர், ஆம்புலன்ஸ் ஒன்றில் அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து பற்றி பொலிஸார் முழு அளவில் விசாரணை நடத்துவார்கள் என நிகிபோரோவ் தெரிவித்து உள்ளார் என அந்த ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான...

2026-07-17 22:32:10
news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31
news-image

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7...

2026-07-17 12:19:37
news-image

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்:...

2026-07-17 09:18:48
news-image

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும்...

2026-07-16 14:45:24
news-image

கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்டது புதிய குரங்கு...

2026-07-16 12:23:34
news-image

கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றம்...

2026-07-16 11:38:17
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பொலிஸார்...

2026-07-16 08:57:12