குளிர் கால­த்­தில் சருமப் பாது­காப்­பு

Published By: Robert

17 Nov, 2016 | 10:41 AM
image

நீங்கள் என்ன செய்தாலும் குளிர்காலத்தில் உங்கள் சருமம் பாதிப்படைவதையும் அதனால் ஏற்படும் அசௌகரியங்களையும் தவிர்ப்பது கடினம். சரும வறட்சி இல்லாதவர்கள் உட்பட ஏறக்குறைய அனைவருக்குமே இந்த பிரச்சினை ஏற்படும். எண்ணெய்ப்பசை சருமம் உடையவருக்கும் கூட இந்த பனிக்காலம் வறட்சியை ஏற்படுத்தும்.

எந்த வகை சருமம் உடையவரானாலும் குளிர்காலம் என்றால் சருமம் மற்றும் உடல் பராமரிப்பில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். இதற்கு சற்று பொறுமை மற்றும் நேரம் செலவிடுதல் அவசியமென்றாலும் அதற்கான பலன்கள் நிச்சயம் உண்டு.

தினமும் குளிக்கப் போகும் முன் உடலுக்கான ஆயில் அல்லது எளிய தேங்காய் எண்ணெயைக் கூட உடலில் நன்கு தடவி பின்னர் குளிப்பதால் உங்கள் சரும ஈரப்பதத்தைப் பாதுகாத்து குளிக்கும்போது ஏற்படும் அதிகபட்ச ஈரப்பத இழப்பைத் தவிர்க்கிறது.  

குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது முடியாத காரியம். ஆனால் சூடான தண்ணீர் சரும வறட்சியை அதிகரிக்கும் என்பதால் வெதுவெதுப்பான தண்ணீரை குளிக்கப் பயன்படுத்துங்கள். இது மிகவும் முக்கியமான உடல் பராமரிப்புக் குறிப்பு.

 உங்களுக்கு தாகம் இல்லையென்றாலும் வெயில் காலங்களில் தண்ணீர் பருகுவதுபோல் போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டியது அவசியம். இது உடம்பில் பல உணர இயலாத சிக்கல்களைத் தவிர்க்கும்.

இரவு உறங்கச் செல்லும் முன் மசாஜ் எண்ணெய் உபயோகியுங்கள். இதை வாரம் குறைந்தது ஒருமுறையாவது செய்துவந்தால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து குளிர்காலத்தில் சரும ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். இதனை வாரம் ஒருமுறைக்கு மேல் செய்வது சிறந்தது.

உடல் பராமரிப்பில் நாம் முக்கியமாக மறந்துவிடுவது நமது கைகளை. ஒரு நாள் முழுவதும் அதிக வேலைகளை செய்வது இந்தக் கைகள் என்றாலும் நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.

எனவே கைகளில் தடவிக்கொள்ளும் ஹாண்ட் க்ரீம் போன்ற ஒன்றை பயன்படுத்தி கையில் சருமம் வறட்சியாகாமல் தடுக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடலுக்கு...

2023-12-09 18:58:12
news-image

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கா?

2023-12-08 16:38:54
news-image

முளைகட்டிய தானியங்களை சாப்பிடுபவர்களா நீங்கள்.? இதோ...

2023-12-06 20:20:05
news-image

புற்றுநோய் அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்!

2023-12-05 17:55:17
news-image

மருதாணி போட்டுகொள்ளப் போகிறீர்களா?

2023-12-04 16:42:05
news-image

புற்றுநோய்க்கு மருந்தாகுமா தேன்?

2023-12-02 12:38:53
news-image

‘குட்நைட்’ சொல்லப் பயமா?

2023-11-28 14:29:14
news-image

என்ட்டி பயோட்டிக்: ஹீரோவா, வில்லனா?

2023-11-25 16:33:21
news-image

நீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்,...

2023-11-24 17:22:53
news-image

தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

2023-11-24 10:50:35
news-image

நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு நிலையில் நீங்கள்...

2023-11-23 10:20:11
news-image

பெண்களை குறிவைக்கும் குதிக்கால் வலி!

2023-11-22 16:47:04