வெள்ள பாதிப்பை மறக்க வைத்த பீப் சோங்

Published By: Robert

26 Dec, 2015 | 10:08 AM
image

 தமி­ழ­கத்தை சீர­ழித்த வர­லாறு காணாத வெள்ளபா­திப்பின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் அதனை முழு­மை­யாக மறந்து விட்டு சிம்­பு­வையும் இசை­ய­மைப்­பாளர் அனி­ருத்­தையும் கைது செய்­யுங்கள். தூக்­கி­லி­டுங்கள் என தமி­ழ­க­மெங்கும் போராட்­டங்கள் வெடிக்­கின்­றன.

உரு­வ­பொம்­மைகள், செருப்பு மாலைகள், பிணையில் வெளிவ­ர­மு­டி­யாத வழக்­குகள், இதற்­கெல்லாம் மேலாக சிம்­புவை கைது செய்­வ­தற்கு தனிப்­ப­டைகள் அமைத்து பொலிஸார் தேடுதல் வேட்டை. இதற்­கெல்லாம் காரணம் ஒரு பாடல்....

கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் இணை­யத்தில் வெளியா­கிய பீப் பாடல் பெண்­களை இழி­வு­படுத்தும் வகையில் ஆபாச வார்­த­்தை­க­ளுடன் சிம்பு எழுதி பாடி­ய­தா­க வும் அனிருத் இசை­ய­மைத்­த­தா­கவும் குற்­றச்­சாட்டு. இப் பாடல் முதலில் (You Tube) யூரியூப்பில் வெளியா­கி­யது. பின்னர் வாட்ஸப், பேஸ்புக் என சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பர­வி­யது. இத­னை­ய­டுத்து தமி­ழ­க­மெங்கும் அனி­ருத்­துக்கும் சிம்­பு­வுக்கும் எதி­ராக பல போராட்­டங்கள் வெடிக்க ஆரம்­பித்­தன. அத்­தோடு பல மகளிர் அமைப்­புகள் சிம்­பு­வுக்கும் அனி­ருத்­துக்கும் எதி­ராக பல்­வேறு பிரி­வு­களில் வழக்கு தொடர்ந்­தனர். இதில் பிணையில் வெளிவ­ர­மு­டி­யாத பிரிவும் ஒன்று. சிம்­பு­வுக்கும் அனி­ருத்­துக்கும் எதி­ராக போராட்­ட­ங்களை நடத்­து­ப­வர்கள் எல்­லோரும் முன்­வைக்கும் மிகப்­பெ­ரிய குற்­றச்­சாட்டு இவர்கள் சமூ­கத்தை சீர­ழிப்­ப­தாகவும் பெண்­களை இழி­வு­ப­டுத்­தி­விட்­ட­தா­கவும் அடுத்த தலை­மு­றையை கெடுப்­ப­தாகவும் குறிப்­பாக குழந்­தைகள் இப்­பா­ட­லினால் சீர­ழி­வார்கள் என்­பதே ஆகும்.

இவ்விடத்தில் ஒரு விட­யத்தை நாம் கவ­னிக்க வேண்டும். இது­வரை தமிழ் சினி­ மாவில் எத்­த­னையோ பாடல்கள் ஆபா­ச­மா­கவும் பெண்­களை இழி­வு­ப­டுத்­து­வ­தா­க வும் கொச்சை தமிழில் வெளிவந்­துள்­ளன. இல்லை என்று மறுக்க முடி­யாது. பெண்­களை கவர்ச்சிப் பொரு­ளாக மட்டும் காட்­டு­கின்ற தமிழ்­ சி­னி­மாவை நாம் கை­தட்டி ரசிக்­கின்றோம். ஏன் எத்­த­னையோ திரைப்­ப­டங்கள் குடும்­பத்­துடன் பார்க்க முடி­யாத அளவு ஆபா­ச­மா­கவும் இரட்டை அர்த்­தங்கள் நிறைந்­த­தா­கவும் உள்­ளன. பல முன்­னணி நடி­கர்­களின் திரைப்­ப­டங்களும் இதற்கு விதி­வி­லக்கு அல்ல. ஆனால் 5 தனிப்­ப­டைகள் அமைத்து தேடுதல் வேட்டை, எந்­நே­ரத்­திலும் கைதா­கலாம் என்ற நீதி­மன்ற உத்­த­ரவு. மேலும்,. வெளிநாட்­டுக்கு தப்பி செல்ல கூடாத வகையில் கட­வுச்­சீட்டை முடக்கும் முயற்­சி யில் பொலிஸார். இந்­த­ளவு சிம்பு செய்த குற்றம் பார­தூ­ர­மா­னதா ?

சிம்பு வேண்­ட­த்த­காத வார்­த்­தை­களை உப­யோ­கித்து இப்­பா­டலை பாடி­யது குற்­றம்தான். அதனை கண்­டிப்­பது தவறு அல்ல. ஆயினும், இப்­பாடல் எந்த திரைப்­ப­டத்­திலும் வெளியாகவில்லை, இசைத்­தொ­குப்பும் அல்ல உத்­தி­யோக பூர்­வ­மாக வெளியி­டப்பட்­ட­தில்லை. சிம்­புவின் வீட்டில் அவர் விளை­யாட்­டாக பாடி, அதனை வேண் டாம் என வீசிய பாடல். அதனை யாரோ திருடி இணை­யத்தில் வெளியிட்­ட­தா­கவே சிம்பு பகி­ரங்­க­மாக தெரி­வித்தார் .

மேலும், சர்ச்­சைக்­கு­ரிய பீப் பாடல் எனது பாடல் தான். இதற்கும் அனி­ருத்­துக்கும் சம்­பந்தம் இல்லை. இது என் பாடல். அவரை இழுக்க வேண்டாம். எல்­லா­வற்­றையும் நான் ஏற்றுக் கொள்­கிறேன் .ஒரு படமோ பாடலோ நான் அதி­கா­ரப்­பூர்­வமாக வெளி­யி­டும் போது நீங்கள் என்னை கேள்வி கேட்­கலாம். சர்ச்­சைக்­கு­ரிய பீப் பாடல் எந்த திரைப்­ப­டத்­திலும் வர­வில்லை, தொலைக்­காட்சி வானொ­லியில் ஒலி­ப­ரப்­பா­க­வில்லை. பிறகு என்­னிடம் கேள்வி கேட்­பது ஏன்? சென்­ஸாரில் சின்ன கெட்டவார்த்­தை­களை கூட நீக்க சொல்லி விடு­வார்கள், அதை மனதில் வைத்து தான் இதில் பீப் பயன்­ப­டுத்­தினேன். வேடிக்­கை­யாகத் தான் அந்த முயற்சியை செய்­தேனே தவிர அது இறு­தி­யான யோசனை அல்ல. நான் விளை­யாட்­டாக வீட்டில் வைத்­தி­ருந்­ததை எடுத்து யாரோ பொது­வெ­ளியில் விட்­ட ­தற்கு என்னை கேள்வி கேட்­க­லாமா? சமை த்துக் கொண்­டி­ருக்கும் உணவை திரு­டி­விட்டு நன்­றாக இல்லை என சொல்­வது போல இருக்­கி­றது. சமைத்து முடித்­த­வுடன் தானே அசல் சுவை தெரியும். இந்தப் பாடல் குழந்­தை­களிடம் போய் சேர்­கி­றது என சொல்­லா­தீர்கள். தொலைக்­காட்­சியில் வந்தால் தான் குழந்­தை­க­ளிடம் சென்­ற­டையும். இணை­யத்தில் ஆபாச தளங்கள் கூடத்தான் இருக்­கி­ன்றன. அவை குழந்­தை­களை சென்­ற­டை­யாதா? என் பாடல் மட்­டும்தான் குழந்­தை­க­ளிடம் போய் சேருமா?

பெண்ணை அடி, உதை என சொல்லும் பாடல்­களை யாரும் கேள்வி கேட்­ப­தில்லை. ஆனால் பெண்­களை திட்ட வேண்டாம், உன்னை நீயே திட்­டிக்கோ என்­றுதான் எழு­தி­யுள்ளேன். பெண்­களை திட்ட வேண்டாம் என்­பதே என் பாடலின் கரு. பெண்­க­ளுக்கு ஆத­ர­வான இப் பாடலை எதிர்ப்­பது கஷ்­ட­மாக இருக்­கி­றது. எனக்கு பெண் ரசி­கைகள் தான் அதிகம். இதை தேவை­யில்­லாமல் திரித்­து­விட்டு சிம்பு என்ற தனி­ம­னி­தனுக்கு எதி­ராக திருப்­பி­விட்­டி­ருக்­ கி­றார்கள்.இனி மேல் என் இமேஜ் கெட்­டுப்­போக எது­வு­மில்லை. ஏற்­க­னவே நிறைய காயப்­ப­டுத்­தி­ விட்­டார்கள். அதையும் மீறி நான் இன்று உங்­க­ளுடன் பேசிக் கொண்­டி­ருக்­கிறேன். அதற்குக் காரணம் கூட என் பெண் ரசி­கை­கள்தான். அவர்­களின் ஆத­ரவு தான். பலாத்­கார வழக்கில் சிக்­கி­யவன் விடு­த­லை­யா­கிறான். ஆனால் நான் செய்­யாத தவ­றுக்கு அந்தப் பாட்டைக் கூட சரி­யாக கேட்­காமல் உருவ பொம்மை எரிப்பு என போராட்டம் செய்­வது ஏன் என்று தெரி­ய­வில்லை என உருக்­க­மாக தெரி­வித்­தி­ருந்தார் .

இதே­வேளை தாங்கள் பாடலை வெளி­யி­ட­வில்லை. தங்­க­ளுக்கு வேண்­டப்­ப­டாத யாரோ இது­போன்று மோசடி வேலை­களில் இறங்கி விட்­டனர். ஆயினும் இதற்­காக நாங்கள் மன்­னிப்பு கேட்­கிறோம் என்று சிம்­புவின் தந்தை டி.ராஜேந்­தரும், என் மகனை தூக்­கி­ லிட வேண்டும் என்­கி­றீர்கள். தூக்கில் போடு­ம­ளவு என் மகன் என்ன செய்தான். உங்­க ­ளுக்கு என் பையன்தானே வேண்டும், எந்த பொலி­ஸிடம் வேண்­டு­மா­னாலும் ஒப்­ப­டைக்­கிறோம் எடுத்துக் கொள்­ளுங்கள். எங்­களை விட்­டு­வி­டுங்கள். தமிழ்­நாட்டை விட்டு சென்று வேறு எங்­கா­வது போய் பிழைத்து கொள்­ளு­கின்றோம்.

பீப் பாடல் பெண்­களின் மனதை புண்­ப­டுத்­தி­யி­ருந்தால் நாங்கள் வருத்தம் தெரி­விக்­கிறோம். நாங்கள் இதை வெளியிட்­ட­ வர்­களை கண்­டு­பி­டிக்கச் சொல்லி முறைப்­பாடு கொடுத்தோம். அதன் மீது எந்த நட­வ­டிக்­கையும் இல்லை. ஆனால் சிம்­புவின் மீது வழக்கு பதிவு செய்து விரட்­டு­கின்­ற னர். சிம்பு என்ன குற்றம் செய்தார்? பொது­நி­கழ்ச்­சி­யிலோ, படங்­க­ளிலோ, பேட்­டி­யிலோ ஏதா­வது சொல்­லி­யி­ருக்­கி­றாரா? எது­வுமே இல்லை. அவரோ சின்ன பையன், அவ­ருக்கு இன்னும் திரு­மணம் கூட ஆக­வில்லை. வீட்டில் நண்­பர்­க­ளுடன் விளை­யா ட்­டாக பண்­ணிய பாடல், அதுவும் 'பீப்' போட ப்­பட்டு இறு­தியில் தேவை­யில்லை என்று தூக்கிப் போடப்­பட்ட பாடல். இதனால், எங்­க­ளுக்கு நிம்­ம­தி­யில்லை. எந்த நேர மும் வீட்டின் முன்பு பொலிஸ் இருக்­கி­றது. 24 மணி நேரமும் வீட்டின் முன்பு கெமராவும் கையு­மாக ஆட்கள் இருந்தால் எங்­க­ளுக்கு என்ன நிம்­மதி இருக்­கி­றது. என் மகனை தூக்­கி­லிட வேண்­டு­மானால் என்னை தூக்­கி­ லிட்­டபின் அவரை தூக்­கி­லி­டுங்கள் என்று சிம்­புவின் தாயார் உஷா ராஜேந்­தரும் உரு க்­க­மாக தெரிவித்திருந்தனர்.

உண்­மையில் வேண்­டு­மென்றே இப்­பா­டலை சிம்­பு­வுக்கு எதி­ராக இணை­யத்தில் கசிய விட்­டி­ருப்பின் அவர்கள் யாரென்று இது­வரை அறி­யப்­ப­ட­வில்லை. அந்­த­ளவு அவரை பழி­வாங்கும் நோக்கில் தமிழ் சினி­மாவில் யார் உள்­ளனர் என்­பதும் கேள்வி க்குறியே...

இதே­வேளை, யூரி­யூப்பில் பாடலை வெளி­யிட்­டது யார் என்ற விப­ரத்தை தெரிந்து கொள்­வ­தற்­காக மத்­திய குற்­றப்­பி­ரிவு துணை கமி­ஷனர் ஜெயக்­குமார் யூடியூப் நிறு­வ­னத்­திற்கு கடிதம் எழு­தி­யுள்ளார். இந்­நி­லையில் பீப் பாடலை வெளி­யிட்­டதன் பின் ­னணி பற்றி பர­ப­ரப்பு தக­வல்கள் வெளி­யா­கி­யது. அதா­வது, பாடல் பாடப்­பட்டு அதன் இசை அமைப்பு நிறை­வ­டைந்­த­வுடன் அனிருத் தனது பாடலை நட்பு ரீதி­யிலும், விளை­யாட்டு ரீதி­யிலும் வளர்ந்து வரும் நடி­க­ரான சிவ­கார்த்­தி­கே­ய­னுக்கு அனுப்­பி­ய­தா­கவும், அவர் பாடலின் பாதிப்பு புரி­யா­மலும், தன்மை தெரி­யா­மலும் விளை­யாட்­டுத்­த­ன­மாக அந்த பாடலை தனது நண்­பர்கள் சில­ருக்கு பகிர்ந்­துள்ளார். அவர்கள் மற்ற நண்­பர்­க­ளுக்கு பகிர, யூடி­யூப்­பிலும் சிலர் பகிர்ந்­துள்­ளனர். அதன் பிறகு வாட்ஸப், பேஸ் புக் என உலகம் முழு­வதும் பாடல் பரப்­பப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ஆயினும். இதில் சிவ­கார்­த்தி­கே­யனை சம்­பந்­தப்­ப­டுத்த வேண்டாம் என சிம்பு தரப்பு மறுத்­துள் ளது.

இந்நிலையில் தற்­போது, 5 தனிப்­ப­டைகள் அமை த்து சிம்­புவை கைது செய்­வ­தற்­கான முயற்­சியில் பொலிஸார் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சிம்பு தனக்கு முன் பிணை கோரியமைக்கு சென்னை உயர் நீதி­மன்­றத்தில், சிம்­பு­வுக்கு முன் பிணை வழங்க அரசு தரப்பு வழக்­க­றி­ஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரி­வித்த நிலை­யில்­ சிம்­புவை கைது செய்ய எந்­த­வித தடையும் இல்லை என்று நீதி­மன்றம் தெரி­வித்­தது. இத­னை­ய­டுத்து சைபர் கிரைம் பொலிஸார் சிம்­புவை கைது செய்ய தற்­போது 5 தனிப்­படை அமைத்­துள்­ளனர். நெரு ங்­கிய நண்­பர்கள் வீடு­களில் சிம்பு பதுங்கி இருக்­கி­றாரா எனவும் தேடப்­பட்டு வரு­கி­றது. மேலும், டில்லி, மும்பை, ஹைத­ரா­பாத்தில் உள்ள சினிமா வட்­டார நண்­பர்கள் வீடு­களின் பட்­டி­ய­லையும் பொலிஸார் விசா­ரித்து, கண்­கா­ணித்து வரு­கின்­றனர்.

இதேவேளை சிம்புவின் பல திரைப்படங் கள் இதனால் முடங்கியுள்ளன.

சிம்பு கைவசம் ‘இது நம்ம ஆளு, வேட்டை மன்னன், அச்சம் என்­பது மட­மை­யடா’ என்ற 3 திரைப்­ப­டங்கள் உள்­ளன. இவற்றில் ‘இது நம்ம ஆளு’ படப்­பி­டிப்பு முடி­வ­டைந்த நிலை யில். ஒரு பாடல் காட்சி மட்டும் நிறை­வ­டை­யாமல் உள்­ளது. ‘வேட்டை மன்னன்’ படம் பாதியில் நிற்­கி­றது. விண்­ணைத்­தாண்டி வரு­வாயா’ வெற்­றிக்கு பின் கௌதம் மேனனின் இயக்­கத்தில் தற்­போது சிம்பு நடித்­துக்­கொண்­டி­ருக்கும் ''அச்சம் என்­பது மட­மை­ய­டா'' தி­ரைப்­ப­டத்தின் படப்­பி­டிப்பு விறு­வி­றுப்­பாக நடந்து வந்த நிலையில் அது வும் தடைப்­பட்­டுள்­ளது. இதே­வேளை கன­டா­விற்கு இசை­நி­கழ்ச்சி நடத்த சென்ற அனிருத் நாடு திரும்ப முடி­யாத நிலையில் அங்­கேயே தங்­கி­விட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. வேதாளம் மூலம் மிகப்­பெ­ரிய ஹிட் பாடல்­களை இறு­தி­யாக வழங்­கிய அனிருத் பல திரைப்­பட வாய்ப்­பு­களை இழந்­து­வ­ரு­கிறார். தற்­போது அவ­ரது இசையில் வெளிவர வேண்­டிய பல திரைப்­ப­டங்கள் அவ­ரது கை யை விட்டு சென்­றுள்­ளன.

சூர்­யாவை வைத்து ஹரி இயக்கி வரும் சிங்கம்–3, தனுஷ் நடிக்கும் கொடி படங்­க­ளுக்கும் அனி­ருத்தை ஒப்­பந்தம் செய்து இருந்­தனர். மேலும் 3 புதிய தமிழ் படங்­க­ளிலும் 2 தெலுங்கு படங்­க­ளிலும் ஒப்­பந்தம் செய்ய அவ­ருடன் பேச்சுவார்த்­தைகள் நடந்­தன. ஆனால் பீப் பாடல் சர்ச்­சை­யினால் திடீ­ரென்று சிங்கம்–3 படத்தில் இருந்து அவரை நீக்கி விட்­டனர். மேலும் 2 புதிய படங்­களில் இருந்தும் நீக்­கப்­பட்டு விட்டார். தனுஷின் ‘கொடி’ படத்தில் இருந்தும் அவரை நீக்­கு­வதா? வேண்­டாமா? என்று படக்­கு­ழு­வினர் ஆலோ­சிப்­ப­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. பீப் பாடல் பிரச்­சினை தொடர்­பாக அவர் சென்னை திரும்­பாமல் தொடர்ந்து கன­டா­வி­லேயே தங்கி இருப்­பதால் ஏற்­க­னவே ஒப்­பந்­த­மான படங்­க­ளுக்கு இசை­ய­மைக்க முடி­யாமல் முடங்­கி­யுள்­ளன. இவ்­வாறு சிம்பு அனி­ருத்தின் 6 திரைப் படங்கள் முடங்கி உள்­ளன.

பீப் பாடலினால் அனிருத்தை விட சிம்புவிற்கே அதிகமான அழுத்தங்கள் வலுத்துள்ளன. குழந்தை நட்­சத்­தி­ர­மாக சினி­மாவில் அறி­மு­க­மா­கி­ய­தோடு கௌர­வ­மான குடும்ப பின்­னணி கொண்ட சிம்பு விளை­யாட்­டாக செய்­த­தாக கூறப்­படும் இவ்விடயம் அவ­ரது வாழ்க்­கை­யையே தற்­போது திசை திருப்­பி­யுள்­ளது. இத­னால்தான் நம் முன்­னோர்கள் விளை­யாட்டு வினை­யாகும் என்று தெரிந்தே பழ­மொழி கூறி­யி­ருக்­கின்­றனர் போல... சிம்­புவும் அவரது குடும்பத்தாரும் பகிரங்கமாக இதற்கு மன்னிப்பு கேட்ட பின்னரும் அவரை தமிழகம் விடுவதாகஇல்லை. அந் தளவு சிம்பு செய்தது மன்னிக்க முடியாத குற்றமா...? இது வேறு ஏதும் பழிவாங்கலா?

டுவிட்டரில் பிரபலங்களுக்கு வழங்கப் படும் குறியீட்டு இலச்சினை கூட சிம்புவின் கணக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதை விட பாரிய பிரச்சினைகள் எழுந்த போது மௌனம் காத்த நடிகர் சங்கம் கூட இப் பிரச்சினையில் சிம்புவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலின் தாக்கமாக கூட இருக்கலாம்.

இந்தியாவில் தீர்க்கப்படாத எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன.அதை எல்லாம் கண்டுகொள்ளாதவர்கள், பீப் பாடலுக் காக தனிப்பட்ட ரீதியில் சிம்பு என்ற தனி மனிதனுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை வேடிக்கையாக இருக்கிறது.

இறுதியாக ஒன்று பாலியல் துஷ்பிர யோகம் செய்தவர் விடுதலையாவதற்கும் தனது வீட்டில் தான் பாடிய பீப் பாடலுக்காக ஒருவரை தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பதற்கும் தனிப்படை அமைத்து கைது செய்ய நடவடிக்கை எடுப் பதற்கும் நேரகாலம் காரணமா... அல்லது வேறு ஏதும் உள் நோக்கமா என்று பொறுந் திருந்துதான் பார்க்க வேண்டும்.....

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03