வடக்கில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாராஜா தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ள அவர் அங்கு பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து வரும் நிலையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை நோக்கிச் செல்கின்றது.
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தொழிற்சந்தை அணுகுகைக்கான வாய்ப்புக்கள் இவ்விரு நாடுகளுக்குமுரிய அந்தந்த எமது உயர்ஸ்தானிகராலயங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூரின் வெற்றிடங்கள் பற்றி ஏற்கனவே ஆளுநர் அலுவலகத்தின் முகப்புத்தகப் பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை அமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி அறிவித்ததிலிருந்து சிங்கப்பூர் நான்ஜங் பல்கலைக்கழகத்துடனும் மலேசியாவிலிருந்து சாத்தியமான முதலீடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் சிங்கெல்த்துடன் மிக நெருக்கமான ஒத்துழைப்பிலிருந்து வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவை பயனடையும். நான்கு பருவகால விடுதிகள் உள்ளடங்கிய தனியார் முதலீட்டாளர்கள் வாய்ப்புக்களை விமர்சனரீதியாக மதிப்பீடு செய்வார்கள். சூரிய மின்கலன்களைப் பொருத்துவது மற்றுமொரு விருப்பிற்குரிய விடயமாகும் என்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM