உன் நன்மைக்காகத் தான்...!

Published By: Sindu

15 Sep, 2022 | 10:01 AM
image

கேள்வி

நான் 20 வயதுப் பெண். வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். மாப்பிள்ளைக்கு வயது 34. குடும்பத்தார் விரும்பியதால் சம்மதித்தேன். அவர்களது அனுமதியுடன் தொலைபேசியில் அவருடன் கதைக்க ஆரம்பித்தேன். அப்படியே அவர் மீது எனக்கு அன்பும் வளர்ந்தது. திடீரென என் வீட்டார் இந்தத் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் என்னுடன் கதைப்பதை அவர் நிறுத்திவிட்டார். என்னால் அவரை மறக்க முடியவில்லை. எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை. வறுமை நிலையில் இருக்கும் என் குடும்பத்தாரின் சந்தோஷத்துக்காக நான் சாதாரணமாக இருப்பது போல் நடிக்கிறேன். இதிலிருந்து எப்படி நான் மீள்வது?

பதில்: 

என்ன காரணத்துக்காக திருமணத்தை உங்கள் வீட்டார் மறுத்தனர் என்று நீங்கள் குறிப்பிடவில்லையே...! வறுமை நிலையில் இருக்கும் பெற்றோர், முடிவான ஒரு திருமணத்தை நிறுத்திவிட்டார்கள் என்றால், ஒருவேளை, திருமணம் முடிவான பின்னர்தான் அவரை பற்றிய உண்மைகள் ஏதேனும் தெரியவந்திருக்கலாம். ஏனென்றால், என்னதான் வறுமையாக இருந்தாலும், தன் மகளுக்கொரு மகிழ்ச்சியான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கவே எந்த பெற்றோரும் விரும்புவார்கள்.

எனவே, உங்கள் பெற்றோரின் முடிவு நிச்சயம் உங்களது நன்மைக்காகத்தான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளாதீர்கள். காலமும் சூழலும் நிச்சயமாக உங்கள் வேதனையை போக்கும். அதுவரை பொறுமையுடன் இருக்கப் பழகுங்கள். முடிந்தால், ஏதேனும் கல்வித் துறையிலோ அல்லது வேலையிலோ உங்களை ஈடுபடுத்திக்கொள்வது உங்களுக்கு உதவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right