(நெவில் அன்தனி)
நேபாளத்திற்கு எதிராக கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இந்தியா, 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட (SAFF)வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.
இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத அணியாக களம் இறங்கிய நேபாளம் சம்பியனாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய இந்தியா வெற்றியீட்டி சம்பியனானது.
இந்த வெற்றியின் மூலம் முதல் சுற்றில் நேபாளத்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்தியா நிவர்த்தி செய்து கொண்டது.
இலங்கையில் முதல் தடவையாக நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியில் பாகிஸ்தானைத் தவிர மற்றைய 6 தெற்காசிய நாடுகளும் பங்குபற்றின.
நேபாளத்துடனான இறுதிப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இந்தியா இடைவெளையின்போது 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
போட்டி ஆரம்பித்ததும் நேபாளத்தின் ஆதிக்கம் வெளிப்பட்டது. இந்திய கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்த நேபாளத்தினால் கோல் எதுவும் போட முடியாமல் போனது.
எவ்வாறாயினும் அதன் பின்னர் திறமையாக விளையாடிய இந்தியா 18ஆவது நிமிடத்தில் பொபி சிங் மூலம் முதலாவது கோலை போட்டது.
தொடர்ந்து நேபாள கோல் எல்லையை ஆக்கிரமித்த இந்தியா 2ஆவது கோலை கொரவ் சிங் மூலம் போட்டது.
போட்டியின் 39ஆவது நிமிடத்தில் நேபாள அணித் தலைவர் பிரசாந்த லக்சாம், இந்திய வீரர் ஒருவரை முரட்டுத்தனமாக வீழ்த்தி முதுகில் தாக்கியதால் மத்தியஸ்தரின் நேரடி சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.
இதனைத் தொடர்ந்து 10 வீரர்களுடன் விளையாடிய நேபாளம் நெருக்கடியை எதிர்கொண்டது.
இடைவேளையின் பின்னர் தொடர்ந்து திறமையாக விளையாடிய இந்தியா போட்டியின் 63ஆவது நிமிடத்தில் தனது கோல் எண்ணிக்கையை 3ஆக உயர்த்தியது. அணித் தலைவர் வன்லால்பெக்கா குவிட்டே அந்த கோலைப் போட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா மாற்று வீரர்களை அடுத்தடுத்து களம் இறக்கியது.
அதேவேளை, நேபாளம் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தது. ஆனால் இந்தியாவின் பின்கள வீரர்களும் கோல்காப்பாளரும் அவற்றை தடுத்தனர்.
இறுதியில் போட்டி உபாதை ஈடு நேரத்திற்குள் சென்ற பின்னர் மாற்றுவீரர் அமான் கோல் போட்டு இந்தியாவின் கோல் எண்ணிக்கையை 4ஆக உயர்த்தினார்.
இந்த சுற்றுப் போட்டியில் சிறந்த கோல் காப்பாளருக்கான தங்க கையுறையை சஹில் வென்றெடுத்தார்.. அதிக கோல்களைப் போட்ட வீரருக்கான தங்கப் பந்து விருது பங்களாதேஷின் மிரா{ல் இஸ்லாமு க்கு வழங்கப்பட்டதுடன் சுற்றுப் போட்டியின் சிறந்த வீரருக்கான தங்கப் பாதணி விருது இந்திய அணித் தலைவர் வன்லால்பெக்கா குவிட்டேக்கு சொந்தமானது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM