சீதுவ  விகாரை ஒன்றிலிருந்து விகாராதிபதி சடலமாக மீட்பு - இளம் பிக்கு ஒருவரை தேடி நடவடிக்கை 

Published By: Digital Desk 4

14 Sep, 2022 | 09:27 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 சீதுவை பகுதியின் விகாரை ஒன்றிலிருந்து,  விகாராதிபதி தேரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  விகாரையின் விகாராதிபதி தங்குமிடத்தில் கட்டில் ஒன்றின் மேல் முகம், வாய்ப் பகுதி துணியினால் கட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் கூறினர்.

சீதுவை - வேத்தேவ, ரந்தொலுவ ஸ்ரீ  நத்தாராம  விகாரையின்  விகாராதிபதி  நெடகமுவே  மஹானாம தேரரே ( 55) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  குறித்த தேரர் கழுத்து நெறித்து கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 விகாரையிலிருந்து துர் நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 குறித்த விகாரையில், 18 வயதான இளம்  பிக்கு ஒருவரும் தங்கியிருந்துள்ளதுடன், தற்போது அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், பொலிஸாரின் கவனம் குறித்த பிக்கு மீது திரும்பியுள்ளதாக பொலிஸார் கூறினர். சீதுவை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20